என் மலர்
உள்ளூர் செய்திகள்

பேராவூரணியில் இலவச கண் சிகிச்சை முகாமை தொடங்கி வைத்த போது எடுத்த படம்.
இலவச கண் சிகிச்சை முகாம்
- முகாமில் 485 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது.
- 116 பேருக்கு கண் அறுவை சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி கோகனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கமும், ஏவிஆர் தனலட்சுமி ஜுவல்லரி மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையும் இணைந்து நடத்திய மாபெரும் இலவசகண் சிகிச்சை முகாம் நடைபெ ற்றது.
முகாமிற்குசங்கத் தலைவர் எஸ்பாண்டிய ராஜன் தலைமைவகித்தார்.
மண்டல ஒருங்கிணைப்பாளர் வ.பாலசுப்பி ரமணியன், மாவட்டத் தலைவர்கள் எம்.நீலகண்டன், கே.இளங்கோ, சங்கச் செயலாளர் எம்.எஸ்.ஆறுமுகம், பொருளாளர் சங்கர்ஜவான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் தனலட்சுமி ஜுவல்லரி நிறுவனர் சுதர்சனவள்ளி பாலாஜி குத்து விளக்கு ஏற்றினார்.
முகாமை கண்பார்வை மாவட்ட தலைவர் வி.விஜயகுமார் தொடங்கி வைத்தார்.
மண்டலத் தலைவர்சிவகுமார், வட்டாரத் தலைவர் குருநாதன், கண் சிகிச்சை முகாமின் ஒருங்கிணை ப்பாளர் செல்வகுமார், ஏவிஆர் தனலட்சுமி பாலாஜி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இந்நிக ழ்ச்சியில் கண் மருத்துவர்கள், செவிலியர்கள், சாசனச் செயலாளர் வ.ஜெய்சங்கர், சாசன பொருளாளர் மைதீன்பிச்சை, செய்தி தொடர்பாளர் கதிரவன், சபரி முத்துகுமார்உள்ளிட்ட உறுப்பினர்கள், பொது மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.
முகாமில் 485 பேருக்கு கண் பரிசோதனை செய்ய ப்பட்டது. அதில் 116 பேர் கண் அறுவை சிகிச்சைக்காக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.