என் மலர்
உள்ளூர் செய்திகள்
இலவச மருத்துவ முகாம்
- 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
- காது, மூக்கு, தொன்டை மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
தரங்கம்பாடி:
தரங்கம்பாடி தாலுக்கா கிளியனூர் கிராமத்தில் அல்-ஹிதானா மெட்ரிகு லேசன் பள்ளியில், புதிய பாதை அறக்கட்ட ளையும், விநாயகா மிஷன் மருத்துவ கல்லூரியும் இணைந்து இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
மருத்துவ முகாமிற்கு கிளியனூர் முத்தவல்லி அபுல் ஹசன் தலைமை வகித்தார்.
ஜாமியா மஸ்ஜித் நாட்டாமை எம்.பி.ஹலில், பா.ம.க மாநில துணை பொதுச்செயலாளர் சித்தமல்லி பழனிசாமி, விடுதலை சிறுத்தை கட்சி இஸ்லாமிய சனநாயக பேரவை மாநில துணைச் செயலாளர் ஆயப்பாடி முஜிபுர் ரகுமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊராட்சி மன்ற தலைவர் முகமது ஹாலிது வரவேற்றார்.
இதில், பொது மருத்துவம், மகப்பேறு மருத்துவம், சர்க்கரை நோய் மருத்துவம், கண் மருத்துவம், பல்ம ருத்துவம், அறுவை சிகிச்சை மருத்துவம், குழந்தை மருத்துவம், தோல் நோய் மருத்துவம், காது- மூக்கு- தொன்டை மருத்துவம், எலும்பு மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
விநாயக மிஷன் மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் குணசேகரன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட மருத்துவர்களும் செவிலியர்களும் பங்கேற்று மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை புதியபாதை அறக்கட்டளை பொறுப்பாளர்கள் செல்வேந்திரன், ரகோத்குமார் அன்பழகன் ஆகியோர் செய்திருந்தனர்.