என் மலர்
உள்ளூர் செய்திகள்

மருத்துவ முகாம் நடந்தபோது எடுத்த படம்.
வள்ளியூரில் இலவச மருத்துவ முகாம்
- முகாமை நேதாஜி சுபாஷ் சேனை மாநில நிர்வாகி மகேஷ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
- நேதாஜி சுபாஷ் சேனை சேர்ந்த மற்றும் இளைஞர்கள் 36 பேர் ரத்ததானம் வழங்கினர்.
வள்ளியூர்:
வள்ளியூர் வடக்கு ரத வீதியில் உள்ள அண்ணா படிப்பகத்தில் ராஜாஸ் கல்லூரி பல் மருத்துவம் மற்றும் பொது மருத்துவம், அகர்வால் கண் மருத்துவ முகாம், அன்னை வேளாங்கன்னி ரத்த மையம் மற்றும் நேதாஜி சுபாஷ் சேனை இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை நேதாஜி சுபாஷ் சேனை மாநில நிர்வாகி மகேஷ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். முகாமில் 300-க்கும் மேற்ப்பட் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நேதாஜி சுபாஷ் சேனை சேர்ந்த மற்றும் இளைஞர்கள் 36 பேர் ரத்ததானம் வழங்கினர். நிகழ்ச்சியில் மருத்துவர்கள் செல்வகுமார், ஆன்றனி மைக்கேல், ராஜேஷ், அகமது மற்றும் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக வள்ளியூர் பேரூராட்சி துணை தலைவர் கண்ணர், கவுன்சிலர்கள் மாடசாமி, சங்கர், சுப்பு லெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை நேதாஜி சுபாஷ் சேனை தென்மண்டல இளைஞரணி தலைவர் சுகுணா கணேசன் ஏற்பாடு செய்திருந்தார். முன்னதாக ரமேஷ் கண்ணன் வரவேற்றார். முடிவில் கண்ணன் நன்றி கூறினார்.