search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விடுதலைப் போராட்ட வீரர் பொல்லான்  நினைவிடத்தில் மண் எடுத்த இயக்குனர்கள்
    X

    சினிமா இயக்குனர்களுக்கு பொல்லான் பேரவை தலைவர் வடிவேல் ராமன் வரவேற்பு அளித்த காட்சி.

    விடுதலைப் போராட்ட வீரர் பொல்லான் நினைவிடத்தில் மண் எடுத்த இயக்குனர்கள்

    • சுதந்திரப் போராட்ட வீரர்கள் பிறந்த ஊர்களில் இருந்து மண் எடுக்கும் நிகழ்வு
    • நாடு முழுக்க 1,040 விடுதலை போராட்ட வீரர்களின்ஊர்களில் மண் எடுக்கப்படுகிறது.

    பள்ளிபாளையம்:

    தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கம் மற்றும் இந்தியா பவுண்டேஷன் இணைந்து இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் பிறந்த ஊர்களில் இருந்து மண் எடுக்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.

    நாடு முழுக்க 1,040 விடுதலை போராட்ட வீரர்களின்ஊர்களில் மண் எடுக்கப்படுகிறது. இந்த தியாகிகளின் பெயர் கொண்ட பெருஞ்சுவர் சென்னையில் அமைக்கப்படுகிறது. அதற்கான அஸ்திவாரத்தில் இந்த மண் இடப்படுகிறது.ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலையில் திருப்பூர் குமரன் நினைவிடத்திலும், ஓடா நிலையில் தீரன் சின்னமலை நினைவு இடத்திலும் , அரச்சலூர் நல்ல மங்காபாளையத்தில் மாவீரன் பொல்லான் நினைவிடத்திலும் மண் எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. பொல்லான் நினைவிடத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு நினைவஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தப்ப்பட்டது.

    நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர்கள் ஆர். கே. செல்வமணி, ஆர்.வி உதயகுமார, பேரரசு ,லிங்குசாமி , சித்ரா லட்சுமணன், சீனி ராமசாமி, மித்ரன் ஜவகர், அருண் ராஜா காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர் மாவீரன் பொல்லான் நினைவிடத்தில் இயக்குனர் ரவி மரியா மண் எடுத்தார். அப்போது மாவீரன் பொல்லான் வீர வரலாற்றை நினைவு கூர்ந்தார். இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இயக்குனர் ராஜசேகர் செய்திருந்தார்.அனைவருக்கும் பொல்லான் பேரவை தலைவர் ஈரோடு வடிவேல் ராமன் பொன்னாடை அணிவித்து மாவீரன் பொல்லான் வரலாற்று புத்தகத்தை வழங்கினார்.

    Next Story
    ×