என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![கடையத்தில் காங்கிரஸ் சார்பில் காமராஜருக்கு முழு உருவச்சிலை-ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் கடையத்தில் காங்கிரஸ் சார்பில் காமராஜருக்கு முழு உருவச்சிலை-ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்](https://media.maalaimalar.com/h-upload/2023/06/23/1903285-2congmeet.webp)
கடையத்தில் காங்கிரஸ் சார்பில் காமராஜருக்கு முழு உருவச்சிலை-ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.பி. ராமசுப்பு கலந்து கொண்டு பேசினார்.
- பட்டா நிலத்தில் காமராஜருக்கு முழு உருவச் சிலை அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
கடையம்:
கடையம் கோமதிநாயகம் வளாகத்தில் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் சோனியாகாந்தி பேரவை செயலாளர் டி.கே. பாண்டியன் தலைமை தாங்கினார். வட்டார தலைவர்கள் அழகுதுரை, முருகன் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத் தலைவர் ஆதிமூலம் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.பி. ராமசுப்பு கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் கடையம் பகுதியில் வாங்கப்பட்ட பட்டா நிலத்தில் காமராஜருக்கு முழு உருவச் சிலை அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் ராமநதி, கடனாநதி பாசன நீர்மடை, கால்வாய்களை விவசாயிகளின் நலன்கருதி விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கடையம் - ராமநதி செல்லும் சாலையை விரைவாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கடையத்திற்கு புதிய தாலுகா அந்தஸ்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
இதில் ஐ.என்.டி.யு..சி. மாநில செயலாளர் மாரிகணேசன் மற்றும் மும்பை ராமையா, மகளிர் அணியினர் சீதாலட்சுமி, கே.டி.ஆர். சுகந்தா, வட்டாரத் துணைத் தலைவர் ராமச்சந்திர பாண்டியன், அந்தோணி, சாஸ்தா மாரிதுரைசிவா, பேச்சி அருண்குமார், காங்கிரஸ் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.