என் மலர்
உள்ளூர் செய்திகள்
எப்.எக்ஸ். கல்லூரி 22-ம் ஆண்டு விழா
- கல்லூரியில் சிறப்பாக பணியாற்றிய பேராசிரியர்களுக்கும், சிறந்த மாணவர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
- கல்லூரி முதல்வர் வேல்முருகன் ஆண்டறிக்கையையும், மாணவர்கள் சாதனைகளையும் பட்டியலிட்டு பேசினார்.
நெல்லை:
நெல்லை வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி 22 வருடங்களாக பொதுமக்களின் பேராதரவுடன் செயல்பட்டு வருகிறது. பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியின் 22-ம் ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
விழாவுக்கு ஸ்காட் கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு தலைமை தாங்கினார். ஸ்காட் கல்வி குழும துணைத்தலைவர் அமலி கிளிட்டஸ் பாபு, நிர்வாக இயக்குனர் அருண்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினராக டிசிஎஸ் நிறுவன வேலை வாய்ப்பு துறை தலைமை அதிகாரி விக்னேஷ் கலந்து கொண்டு பேசினார். கல்லூரி முதல்வர் வேல்முருகன் ஆண்டறிக்கையையும், மாண வர்கள் சாதனைகளையும் பட்டியலிட்டு பேசினார். டி.வி. நடிகர் பாலா, விக்கி மற்றும் குறும்பட இயக்குனர் சுபாஷ் கல்யாண் ஆகியோரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
விழாவில் பொது மேலாளர்கள் ஜெயக்குமார், கிருஷ்ணகுமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அனைத்து துறைகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கும், அரசு நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்க ளுக்கும் பரிசுகள், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
கல்லூரியில் சிறப்பாக பணியாற்றிய பேராசிரியர்களுக்கும், சிறந்த மாணவர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில், மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியை எம்.பி.ஏ. மாணவிகள் தீபலட்சுமி, தனிஷா மற்றும் ஸ்டெல்லா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
இந்த ஆண்டு விழா சிறப்புடன் நடைபெறுவதற்கு பெரு முயற்சி மேற்கொண்ட பொதுமேலாளர்கள் ஜெயக்குமார், கிருஷ்ணகுமார், கல்லூரி முதல்வர் வேல்முருகன், வளாக மேலாளர் சகாரியா கேபிரியேல், வேலைவாய்ப்பு துறை டீன் ஞான சரவணன், பயிற்சித்துறை டீன் பாலாஜி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்டோரை ஸ்காட் கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு, நிர்வாக இயக்குனர் அருண்பாபு ஆகியோர் பாராட்டினர்.