என் மலர்
உள்ளூர் செய்திகள்
ஓசூரில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
- ஓசூரில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது.
- 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நேற்று விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நி லைகளில் கரைக்கப்பட்டன. இதையொட்டி ஓசூர் மாநகரமே விழாக்கோலம் பூண்டது.
விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 18-ந்தேதி கொண்டாடப்பட்டது. மும்பை, ஐதராபாத் போன்ற பெருநகரங்களுக்கு இணையாக ஓசூரிலும் ஆண்டு தோறும் பிரம்மாண்ட விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டும், தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத், சிவசேனா கட்சியின் இளைஞர் அணி சார்பிலும், விசுவ இந்து பரிஷத், இந்து முன்னணி, ஸ்ரீராம் சேனா ஆகிய இந்து அமைப்புகள் சார்பிலும், பல்வேறு குழுக்கள் மற்றும் பக்தர்கள் சார்பில் ஓசூர் பகுதியில், 500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைத்து பூஜைகள் நடத்தப்பட்டது.
பாலபூர் விநாயகர், சனாதன விநாயகர், மகாராஜா விநாயகர், வல்லப விநாயகர், என பல்வேறு நூதன பெயர்களில், பிரம்மாண்ட செட்கள் அமைத்து வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை, கடந்த ஒரு வார காலமாக நாள்தோறும் ஏராளமானோர், நீண்ட வரிசையில் சென்று தரிசித்து வியந்தனர்.
கடந்த சனிக்கிழமை வரை, பெரும்பாலான சிலைகள் ஊர்வலமாக கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. நிறைவு நாளான நேற்று, மீதமுள்ள 150 சிலைகளில், 85 சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் சென்று, ஓசூர் ராமநாயக்கன் ஏரியிலும், மற்ற சிலைகள், கெலவ ரப்பள்ளி அணை, சாந்தபுரம் ஏரி, தென்பெண்ணை ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.
சிலைகள் கரைப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு சேலம் சரக டி.ஐ.ஜி ராஜேஸ்வரி தலைமையில், கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் டாகூர் மற்றும் சேலம், நாமக்கல் தர்மபுரி ஆகிய 4 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், ன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் என 1,400 போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.
ஓசூர் நகர பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள், பாகலூர் ரோடு, ராம்நகர், எம்.ஜி.ரோடு, நேதாஜி ரோடு, தாலுக்கா அலுவலக சாலை, எரித்தெருவழியாக தாரை, தப்பட்டை மற்றும் மேளதாளத்துடன் ஊர்வலமாக கொண்டு செல்லப் பட்டு ராம நாயக்கன் ஏரியில் கரைக்கப்பட்டன. ஊர்வ லத்தின்போது, சிலைகள் முன்பு இளைஞர்களும், பெண்களும் உற்சாகமாக நடனமா டியவாறு சென்றனர்.
மேலும், கடும் வெயிலை யும் பொருட்படுத்தாது, பொதுமக்கள் ஆர்வத்துடன் ஊர்வலம் சென்ற வழி நெடுகி லும் குவிந்து, விநாயகர் சிலைகளை தரிசித்து மகிழ்ந்தனர்.மேலும், சிலைகள் முன்பு ஆர்வத்துடன் பலர் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். விநாயகர் சிலைகள் ஊர்வ லத்தை யொட்டி, ஓசூர் மாநகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.