என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொதுத்தேர்வு இன்று தொடக்கம்; மாவட்டத்தில் 14 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர்

- தேர்வு மையங்களில் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
- மேலும், 5 பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட த்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 6528 ஆண்கள் மற்றும் 7502 பெண்கள் உட்பட மொத்தம் 14,030 மாணவ மாணவியர்கள் 69 தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர்.
இதில் 116 மாற்றுத்திறனாளி மாணவர்களும் தேர்வு எழுதுகின்றனர்.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அரசின் வழிக்காட்டுதலின்படி சொல்வதை எழுதுபவர், ஏதேனும் ஒரு மொழிப்பாடம் எழுதுவதில் விலக்கு, கூடுதலாக ஒரு மணிநேரம் ஆகிய சலுகைகள் அரசுத் தேர்வுகள் இயக்குநரால் வழங்கப்பட்டுள்ளன.
தேர்வுக்கான வினாத்தாட்கள் 6 மையங்களில் வைக்கப்பட்டுள்ளது.
இம்மையங்களில் 24 மணிநேரமும் ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இத்தேர்வுப்பணிக்கு 1,161 ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பணியமர்த்தப் பட்டுள்ளனர்.
தேர்வுகளை கண்காணிக்க கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் தலைமையில் 5 பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது.