என் மலர்
உள்ளூர் செய்திகள்

பா்லியாறு அருகே அரசு பஸ்-லாரி நேருக்கு நேர் மோதல்

- போக்குவரத்து பாதிப்பால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
- ஊட்டியில் இருந்து கோவை நோக்கி டிப்பர் லாரி ஒன்று வந்தது.
ஊட்டி,
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம், ஊட்டிக்கு அரசு பஸ் சென்றது. இந்த பஸ்சில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
பஸ்சில் சுரேஷ் என்பவர் டிரைவராகவும், மனோகரன் என்பவா் நடத்துநராக பணியில் இருந்தனர்.
ஊட்டியில் இருந்து கோவை நோக்கி டிப்பர் லாரி ஒன்று வந்தது. இந்த லாரியை மணிகண்டன் என்பவா் ஓட்டி வந்தார்.
குன்னூா்-பா்லியாறு அருகே பஸ் சென்றபோது, டிப்பா் லாரியும், அரசு பஸ்சும் நேருக்குநோ் மோதிக்கொண்டன. இதில் யாருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை.
பஸ்சும், லாரியும் மோதிக்கொண்டதால், அந்த பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசாா், வாகனங்களை அப்புற ப்படுத்தி போக்குவரத்தை சீா் செய்தனா்.
இதையடுத்து, அணிவகுத்து நின்ற வாகனங்கள் சுமாா் 1 மணி நேரம் கழித்து புறப்பட்டு சென்றன. இந்த சம்பவம் குறித்து குன்னூா் போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.