என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![போலி வருகை பதிவேடு புகார் அரசு பள்ளியில் முதன்மை கல்வி அலுவலர் அதிரடி சோதனை போலி வருகை பதிவேடு புகார் அரசு பள்ளியில் முதன்மை கல்வி அலுவலர் அதிரடி சோதனை](https://media.maalaimalar.com/h-upload/2022/09/29/1769291-attendance.jpg)
கோப்பு படம்
போலி வருகை பதிவேடு புகார் அரசு பள்ளியில் முதன்மை கல்வி அலுவலர் அதிரடி சோதனை
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- ஆலத்தூரான்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் போலி மாணவர் பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக தொடர்ந்து புகார் வந்தது.
- மாணவர்கள் தரப்பில் எந்தகடிதமும் தரப்படாததால் தொடர்ந்து ஆப்சென்ட் மட்டுமே போட்டு வந்துள்ளனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகில் உள்ள ஆலத்தூரான்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் போலி மாணவர் பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக தொடர்ந்து புகார் வந்தது. இதுகுறித்து பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் மோகன்ராஜ் மற்றும் பெற்றோர்கள் சார்பில் உயர் அதிகாரிகளுக்கு புகார் அனுப்பப்பட்டது.
32 மாணவர்கள் மட்டுமே அங்கு படிக்கும் நிலையில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிப்பதாக போலி பதிவுகள் மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும் தெரிவித்தனர். இதுகுறித்து வட்டார கல்வி அலுவலரிடம் விளக்கம் கேட்கப்பட்டது.
முைறகேடு நடந்தது உண்மையா என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நசுருதீன் தலைமையிலான அதிகாரிகள் பள்ளிக்கு சென்றனர். தலைமைஆசிரியர் பாத்திமாமேரி பள்ளியில் இல்லை. இதனால் மற்றொரு ஆசிரியர்மற்றும் அங்கிருந்த மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதுகுறித்து முதன்மைகல்வி அலுவலர் தெரிவிக்கையில், இப்பள்ளியில் 32 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். பல மாணவர்கள் வேறு பள்ளிக்கு சென்றுவிட்ட நிலையில் அவர்களின் பெயர்களை நீக்காமல் விட்டுள்ளனர். இதுகுறித்து மாணவர்கள் தரப்பில் எந்தகடிதமும் தரப்படாததால் தொடர்ந்து ஆப்சென்ட் மட்டுமே போட்டு வந்துள்ளனர்.
தற்போது ஆவணங்களை சரியான முறையில் பராமரிக்குமாறு ஆசியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்றார்.