search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மத்தூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
    X

    மத்தூர்பதி பகுதி மாரியம்மன் கோவில் வளாகத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் மீனா சக்தி தலைமையில் கிராம சபா கூட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.

    மத்தூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

    • மத்தூர் அருகே கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
    • சாலை வசதி கோரி மனு அளிக்கப்பட்டது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம். மத்தூர் ஊராட்சி மத்தூர்பதி மாரியம்மன் கோவில் வளாகத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஊராட்சி மன்றத் தலைவர் மீனா சக்தி தலைமையில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படன. கூட்டத்தினை தொடர்ந்து வீட்டுமனை பட்டா, தமிழக அரசு வழங்கும் தொகுப்பு வீடுகள், கழிவு நீர் கால்வாய், தெருவிளக்கு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்மன்றத் தலைவரிடம் கோரிக்கை வைத்து மனுக்களை பொது மக்கள் வழங்கியுள்ளனர்.

    கூட்டத்தில் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், வட்டார வளர்ச்சித் துறை, காவல்த் துறை, கல்வித்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, வேளாண்மைத்துறை, மக்கள் நலப்பணியாளர் ராஜா, அங்கன்வடி பணியா ளர்கள், நியாய விலை கடை பணியாளர்கள், சுய உதவிக்குழு பெண்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×