search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசியில் செல்வராணி ஜவுளி ரெடிமேட்ஸ் பிரமாண்ட திறப்பு விழா
    X

    தென்காசியில் செல்வராணி ஜவுளி ரெடிமேட்ஸ் புதிய கிளையை நிறுவனர் எஸ்.டி.செல்வன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்த காட்சி.

    தென்காசியில் செல்வராணி ஜவுளி ரெடிமேட்ஸ் பிரமாண்ட திறப்பு விழா

    • பாரம்பரிய ஜவுளி நிறுவனமான செல்வராணி ஜவுளி ரெடிமேட்ஸ் தனது புதிய கிளையை தென்காசி மாநகரில் மிக பிரமாண்டமாக தொடங்கியுள்ளது.
    • 8 அடி உயரத்தில் 250 கிலோ கேக் வாடிக்கையாளர்களை கொண்டு வெட்டப்படுகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் 38 ஆண்டுகள் பாரம்பரிய ஜவுளி நிறுவனமான செல்வராணி ஜவுளி ரெடிமேட்ஸ் தனது புதிய கிளையை இன்று காலை தென்காசி மாநகரில் மிக பிரமாண்டமாக 3 தளங்களுடன் கூடிய நிறுவனம் தொடங்கப் பட்டது.

    தென்காசி புதிய கிளையை செல்வராணி நிறுவனர் எஸ் .டி. செல்வன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். கடையில் முதல் விற்பனையை சுரண்டை பொன்வேலன் பட்டு மஹால் உரிமையாளர் பொன்ராஜ் பெற்று கொண்டார் .

    புதிய கடையில் கீழ் தளத்தில் குழந்தைக ளுக்கான ஆடைகளும், தரைதளத்தில் பெண்களுக்கான சேலை பிரிவும், முதல் தளத்தில் பட்டு சேலைகளும், இரண்டாம் தளத்தில் ஆண்களுக்கான ஆடை வகைகளும் அமைந்துள்ளது.

    வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் பல சலுகைகளை வழங்கு கின்றனர். மாலையில் வாடிக்கையாளர்களை கவுரவப்படுத்தும் விதமாக 8 அடி உயரத்தில் 250 கிலோ கேக் வாடிக்கையாளர்களை கொண்டு வெட்டப்படு கிறது.

    இதற்காக வாணி பேக்கர்ஸ் சுந்தர் மற்றும் வாணி சுந்தர் 10 நாட்களாக கேக் தயாரிக்கும் பணியில் ஈடுப்பட்டனர். திறப்பு விழா ஏற்பாடுகளை செல்வ ராணி ஜவுளி நிறுவன உரிமையாளர் எஸ்.பிரின்ஸ் தங்கம் மற்றும் குடும்பத்தினர் செய்திருந்தனர்.

    முதல் நாளான இன்று ரூ.1,000-க்கு மேல் ஜவுளி எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பரிசுகளை வழங்கி னர். திறப்பு விழா நடந்த சில மணி நேரத்தில் பொங்கல் சிறப்பு விற்பனை மக்கள் வெள்ளத்தில் சிறப்பாக தொடங்கியது.


    திறப்பு விழாவில் செல்வராணி நிறுவனர் எஸ்.டி.செல்வன்- குடும்பத்தினர்.



    Next Story
    ×