search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கணவன் இறந்த துக்கத்தில்   மனைவி தூக்குப் போட்டு தற்கொலை
    X

    கணவன் இறந்த துக்கத்தில் மனைவி தூக்குப் போட்டு தற்கொலை

    • முதல் மனைவி பொன்னம்மாளுடன்‌ ஏற்றப்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பழனிச்சாமி 2-வது மனைவி சாந்தியுடன் வாழ்ந்து வந்தார்.
    • இந்நிலையில் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு பழனிசாமி இறந்து விட்டார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி அருகே உள்ள கோனூர், மேற்கு தெருவை சேர்ந்தவர் பழனிச்சாமி.

    இவரது முதல் மனைவி பொன்னம்மாள். 2-வது மனைவி சாந்தி (வயது 55). முதல் மனைவி பொன்னம்மாளுக்கு ஒரு மகனும், 2-வது மனைவி சாந்திக்கு ஒரு மகனும் உள்ளனர்.

    முதல் மனைவி பொன்னம்மாளுடன்‌ ஏற்றப்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, பழனிச்சாமி 2-வது மனைவி சாந்தியுடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு பழனிசாமி இறந்து விட்டார். கணவன் இறந்ததால், கடந்த சில மாதங்களாகவே சாந்தி மனமுடைந்த நிலையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் சாந்தி வெகுநேரம் ஆகியும் வீட்டை விட்டு வெளியே வராததால், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்து உள்ளனர்.

    அப்போது, சாந்தி சேலையால் தூக்கு போட்ட நிலையில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சாந்தியின் உடலை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×