என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![கோத்தகிரியில் கடும் போக்குவரத்து நெரிசல் கோத்தகிரியில் கடும் போக்குவரத்து நெரிசல்](https://media.maalaimalar.com/h-upload/2023/05/02/1875276-img20230430194433.webp)
கோத்தகிரியில் கடும் போக்குவரத்து நெரிசல்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- ஒரே நேரத்தில் பயணம் மேற்கொண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
- போலீசார் போக்குவரத்தை சீர் செய்ய திணறி வந்தனர்.
கோத்தகிரி
கோடை சீசன் தொடங்கி உள்ளதால் நீலகிரி மாவ ட்டத்தில் சுற்றுலாபயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இதன் காரணமாக கூடலூர், ஊட்டி, குன்னூர் பகுதிகளில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
போக்குவரத்து நெருக்கடியை கட்டுப்படுத்த மாவட்ட கலெக்டர் அம்ரித், போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து வாகன நெருக்கடியை சமாளிக்க ஒரு வழிப்பாதை யை அமல்படுத்தலாம் என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி மேட்டுப்பா ளையத்தில் இருந்து வரும் வாகனங்கள் காட்டேரி வழியாகவும், ஊட்டியில் இருந்து கோவை, மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் கோத்தகிரி வழியாகவும் செல்ல ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டது
இந்தநிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை களில் அதிக சுற்றுலாப் பயணிகள் ஊட்டி, குன்னூர் பகுதிகளில் சுற்றுலாவை முடித்துக்கொண்டு கோத்தகிரி மார்க்கமாக மீண்டும் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.
நேற்று மாலை சுற்றுலா பயணிகள் அனைவரும் ஒரே நேரத்தில் பயணம் மேற்கொண்டதால் கோத்தகிரி கட்டபெட்டு பகுதியில் இருந்து குஞ்சப்பனை வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நின்றது. போலீசார் போக்குவரத்தை சீர் செய்ய திணறி வந்தனர்.