search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்து அமைப்பினர் கைது போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்
    X

    முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

    இந்து அமைப்பினர் கைது போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்

    • தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சனாதனம் குறித்து ஆதரவு மற்றும் எதிர்ப்பு குரல்கள் வலுத்து வருகின்றன.
    • எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அவர்களை கைது செய்ததை கண்டித்து திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சனாதனம் குறித்து ஆதரவு மற்றும் எதிர்ப்பு குரல்கள் வலுத்து வருகின்றன. இச்சம்பவத்தை வைத்து போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திண்டுக்கல்லில் அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபுவை கண்டித்து அவர்களது உருவபொம்மையை எரித்து போராட்டம் நடத்தப்போவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிவசேனா மாநில ஒருங்கிணைப்பாளர்பாலாஜி, இந்து மக்கள் கட்சி மாநில துணைப்பொதுச்செயலாளர் தர்மா, மாநில இளைஞரணி துணைத்தலைவர் மோகன்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    ஆனால் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அவர்களை கைது செய்ததை கண்டித்து திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இந்துமக்கள் கட்சி தலைவர் நாகராஜன் தலைமையில் மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், மாநில செயலாளர் மணிகண்டன், சிவசேனா இளைஞரணி மாநில செயலாளர் தமிழ்செல்வன் உள்பட பலர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் போலீசாரை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்தும் கோசங்கள் எழுப்பினர். இதனால் நகர் வடக்கு போலீஸ் நிலையம் முன்பு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×