என் மலர்
உள்ளூர் செய்திகள்
தர்பூசணி சாகுபடி குறித்து தோட்டக்கலை நிபுணர்கள் ஆய்வு
- 0.50 ஹெக்டர் தர்பூசணி சாகுபடி செய்வதற்கு மானியம் வழங்கப்பட்டது.
- மணல் திடல்களில் தர்பூசணி அதிகளவில் பயிரிடுவது குறித்து ஆய்வு செய்தனர்.
தரங்கம்பாடி:
உலக வங்கி நிதியின் கீழ் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டம், மயிலா டுதுறை மாவ ட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் கீழ் தர்பூசணி சாகுபடியை மேம்படுத்தும் வகையில் தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோயில் ஒன்றிய பகுதிகளில் திருக்கடையூர் ஊராட்சிக்கு உட்பட்ட சிங்கனோடை கிராமத்தைச் சேர்ந்த விவசாயிக்கு 0.50 ஹெக்டர் தர்பூசணி சாகுபடி செய்வதற்கு மானியம் வழங்கப்பட்டது.
மேலும் இந்த பகுதியில் மணல் திடல்களில் தர்பூசணி அதிகளவில் பயிரிடுவது குறித்து ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில் தர்பூசணி சாகுபடி செய்யப்பட்ட வயலை உலக வங்கியின் சார்பாக தோட்டக்கலை நிபுணர் (உணவு மற்றும் விவசாய அமைப்பு) சாஜன் கொரியன், தோட்டக்கலை நிபுணர் டாக்டர் வித்யா சாகர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்து பார்வை யிட்டனர்.
ஆய்வின்போது தோட்டக்கலை துணை இயக்குனர் (பொறுப்பு) ரமேஷ், தோட்டக்கலை அலுவலர் கவிராகவி, சீர்காழி தோட்டக்கலை அலுவலர் பார்கவி, உதவி தோட்டக்கலை அலுவ லர்கள் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.