என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
ஓசூர் மாநகராட்சி குழு உறுப்பினர்களுக்கான தேர்தல்: 9 பேர் போட்டியின்றி தேர்வு
Byமாலை மலர்28 July 2023 3:24 PM IST
- மாநகராட்சி கூட்டரங்கில், ஆணையாளர் சினேகா முன்னிலையில் தேர்தல் நடைபெற்றது.
- இதில், மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, உள்பட 38 பேர் கலந்து கொண்டு வாக்களித்தனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சியில், வரிவிதிப்பு மற்றும் மேல்முறையீடு குழுவிற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க, நேற்று மாநகராட்சி கூட்டரங்கில், ஆணையாளர் சினேகா முன்னிலையில் தேர்தல் நடைபெற்றது.
இதில், மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, உள்பட 38 பேர் கலந்து கொண்டு வாக்களித்தனர். இந்த தேர்தலில், தி.மு.க.வை சேர்ந்த மம்தா சந்தோஷ், நாகராஜ், கிருஷ்ணப்பா, சென்னீரப்பா, வெங்கடேஷ் ஆகியோரும், அ.தி.மு.க. கவுன்சிலர்களான லட்சுமி ஹேமகுமார், ரஜினிகாந்த், சிவராம் மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர் பாக்கியலட்சுமி குப்புசாமி என மொத்தம் 9 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
Next Story
×
X