search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சம்பா சாகுபடியில் இலைக்கருகல் நோயை கட்டுப்படுத்துவது எப்படி?
    X

    சம்பா சாகுபடியில் இலைக்கருகல் நோயை கட்டுப்படுத்துவது எப்படி?

    • இலைக்கருகல் நோயை கட்டுப்படுத்தும் முறை குறித்து வேளாண்மை உதவி இயக்குநர் கருப்பையா கூறியினார்.
    • நோயின் முக்கியமான அறிகுறிகள் நெற்பயிரில் தூர்கட்டும் மற்றும் கதிர் பிடிக்கும் பருவங்களுக்கு இடையில் காணப்படும்.

    வேதாரண்யம்:

    சம்பா சாகுபடியில் இலைக்கருகல் நோயை கட்டுப்படுத்தும் முறை குறித்து வேளாண்மை உதவி இயக்குநர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேதாரண்யம் பகுதியில் தற்போது நிலவும் தட்பவெப்ப சூழ்நிலைகளால் நடப்பு சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களில் பாக்டீரியா, இலைக்கருகல் நோய் தாக்க வாய்ப்புள்ளது.

    தற்போது இலைக்கருகல், நோயின் முக்கியமான அறிகுறிகள் நெற்பயிரில் தூர்கட்டும் மற்றும் கதிர் பிடிக்கும் பருவங்களுக்கு இடையில் காணப்படும்.

    அவ்வளவாக புலப்படாத மற்றொரு அறிகுறி இலைகள் மஞ்சள் நிறமான மாறுவதாகும்.

    இந்த இலைகள் பின்னர் கருகியது போன்று தோன்றும்.

    இத்தகைய தாக்குதல் விளிம்புகளின் வழியே இலையுறைக்கும் பரவுகிறது.

    நோய் தீவிரமாகும் போது இப்புள்ளிகள் ஒன்றிணைந்து பெரிய வடுக்கள் அல்லது கருகிய திட்டுக்களை இலைப்பரப்பில் உண்டாக்குகிறது.

    இதனை கட்டுபடுத்த வேளாண்மை துறையின ரால் பரிந்துரை செய்யப்படும் தழைச்சத்தை யூரியா மூலம் மூன்று, நான்கு முறையாக பிரித்து மேலுரமாக இடலாம்.

    யூரியாவை ஜிப்சம் மற்றும் தூள் செய்த வேப்பம் புண்ணாக்குடன் 5:4:1 என்ற விகிதத்தில் கலந்து இடவேண்டும்.

    நோயின் தாக்குதல் அதிகரிக்கும்போது எக்டே ருக்கு ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட் 300 கிராம் மற்றும் காப்பர் ஆக்ஸிகுளோரைடு 1250 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×