என் மலர்
உள்ளூர் செய்திகள்
உடன்குடியில் அனைத்து அத்தியாவசிய பணிகளும் உடனுக்குடன் நிறைவேற்ற நடவடிக்கை - பேரூராட்சி தலைவி தகவல்
- திருச்செந்தூர் வட்டம் உடன்குடி தேர்வு நிலை பேரூராட்சி தலைவராக இருப்பவர் ஹூமைரா ரமீஸ் பாத்திமா.
- குப்பையில்லாத பேரூராட்சியாக மாற்றுவதற்கு தெருக்கள் மற்றும் முக்கிய இடங்களில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தி வருகிறார்.
உடன்குடி:
திருச்செந்தூர் வட்டம் உடன்குடி தேர்வு நிலை பேரூராட்சி தலைவராக இருப்பவர் ஹூமைரா ரமீஸ் பாத்திமா.
இவர் இந்தப் பேரூ ராட்சியில் உள்ள 18 வார்டு கவுன்சிலர்களின் கோரிக்கையை நிறைவேற்றி வருகிறார். பேரூராட்சியின் செயல் அலுவலர் பாபு மற்றும் கோரிக்கை வைக்கும் கவுன்சிலர்கள் ஆகியோரை வைத்து உடனுக்குடன் கோரிக்கையை நிறைவேற்றி வருகிறார். குடிநீர், தெரு விளக்கு, சாலை வசதி, போன்றவற்றிற்கு முன் உரிமை கொடுத்து வருகிறார்.
குப்பையில்லாத பேரூ ராட்சியாக மாற்றுவதற்கு தெருக்கள் மற்றும் முக்கிய இடங்களில் தேங்கும் குப்பை களை உடனுக்குடன் அப்பு றப்படுத்தி வருகிறார். அவசர தேவைக்கு கூடுதலாக தற்காலிக பணியாளர்களை நியமனம் செய்து அனைத்து அத்தியாவசிய பணி களையும் உடனுக்குடன் முடித்து வருகிறார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சிறந்த பேரூராட்சியாக உடன்குடி பேரூராட்சியை மாற்றுவேன் என்றும். அதற்கு கவுன்சிலர்கள்அனைவரும் முழு ஒத்துழைப்பு தருவதாகவும் பேரூராட்சி தலைவி தெரிவித்தார். அப்போது உடன்குடி தேர்வு நிலை பேரூராட்சியின் முன்னால் தலைவி ஆயிஷா கல்லாசி உடன் இருந்தார்.