என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
ஆசாரிபள்ளத்தில் பெண்ணின் கழுத்தில் கிடந்த 9 பவுன் நகை மாயம்
By
மாலை மலர்27 Oct 2022 2:52 PM IST

- உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு பஸ்ஸில் வந்து இறங்கினார்
- அவரது கழுத்தில் கிடந்த 9 பவுன் நகை மாயமாகி இருந்தது
- அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சி களை கைப்பற்றி போலீசார் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
நாகர்கோவில், அக்.27-
ஈத்தாமொழி வண்டா விளை பகுதியைச் சேர்ந்தவர் ஆதி சிவசாமி. இவரது மனைவி தங்கம் (வயது 61). இவர் சம்பவத்தன்று உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு பஸ்ஸில் வந்து இறங்கினார். பெருஞ்செல்வ விளை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அவரது கழுத்தில் கிடந்த 9 பவுன் நகை மாயமாகி இருந்தது . இதன் மதிப்பு 2 லட்சத்து 70 ஆயிரம் ஆகும். இதுகுறித்து தங்கம் ஆசாரிப்பள்ளம் போலீசில் புகார் செய்தார். இது குறித்து போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட னர்.அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சி களை கைப்பற்றி போலீசார் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
X