என் மலர்
உள்ளூர் செய்திகள்

கடலூர் பீச் ரோடு பகுதியில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி முன்பு மாற்றுத்திறனாளிகள் புது வாழ்வு நல சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.
கடலூரில் மத்திய கூட்டுறவு வங்கி எதிரில் மாற்றுதிறனாளிகள் ஆர்ப்பாட்டம்
- வீடு கட்டுவதற்கு மாற்றத்திறனாளிகளுக்கு வட்டி இல்லா கடன் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ள நிலையில் கடன் வழங்கப்படவில்லை.
- கடலூர் கடற்கரை சாலையில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூர்
டிசம்பர் 3 இயக்கம் மாற்றுத்திறனாளிகள் புது வாழ்வு நலச்சங்கம் சார்பில் மாற்றத்திறனாளிகளுக்கு சுயதொழில் செய்வதற்கு கூட்டுறவு வங்கியின் மூலம் ரூ.ஒரு லட்சம் வரை ஜாமீன் இல்லாமல் வட்டி இன்றி கடன் வழங்க வேண்டும். கடந்த ஆண்டு வீடு கட்டுவதற்கு மாற்றத்திறனாளிகளுக்கு வட்டி இல்லா கடன் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ள நிலையில் கடன் வழங்கப்படவில்லை.
இதனை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் கடற்கரை சாலையில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சண்முகம் தலைமையில் மாவட்ட செயலாளர் அமரேசன், துணைத் தலைவர் பாலமுருகன், துணை செயலாளர் மணிகண்டன், இளைஞர் அணி செயலாளர் அறிவழகன் உட்பட பலர் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள். பின்னர் வட்டி இல்லா கடன் வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.