search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேன்கனிக்கோட்டையில்  விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி
    X

    தேன்கனிக்கோட்டையில் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

    • கலைக்குழு மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டது.
    • வேட்டை தடுப்பு காவலர்கள், வனத்துறை ஊழியர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் வனத்துறை சார்பில் காடுகளை பாதுகாக்கவும், வனவிலங்குகளை பாதுகாக்க வேண் டும், கள்ளத்துப்பாக்கி களை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கலைக்குழு மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டது.

    கலைக்குழுவினர் ஒயிலாட்டம், கரகாட்டம் மற்றும் நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தேன்கனிக்கோட்டை பஸ் நிலையத்தில் வனத்துறை சார்பில், வனவிலங்கு பாதுகாப்பு குறித்து கலைக்குழு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் வனச்சரகர் முருகேசன் தலைமை வகித்தார். வனவர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், வனத்துறை ஊழியர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×