என் மலர்
உள்ளூர் செய்திகள்
எடப்பாடி பகுதியில் தொடர் கனமழையால் பயிர்கள் சேதம் விவசாயிகள் வேதனை
- தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு முழுவதும் விட்டு விட்டு பெய்த தொடர் மழையால், பூலாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் விளை நிலங்களை மழைநீர் சூழ்ந்தது.
- மழை நீரால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
எடப்பாடி:
கடந்த சில தினங்களாக எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சித்தூர், கொங்கணாபுரம், செட்டிமாங்குறிச்சி, வெள்ளரிவெள்ளி, பூலாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு முழுவதும் விட்டு விட்டு பெய்த தொடர் மழையால், பூலாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் விளை நிலங்களை மழைநீர் சூழ்ந்தது.
குறிப்பாக காவிரி பாசனப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் பயிரிடப்பட்டிருந்த பருத்தி, நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்கள் தொடர் மழையால் சேதம் அடைந்து வருகிறது. இப்பகுதியில் மழைப்பொழிவு தொடர்ந்திடும் நிலையில், மேலும் பாதிப்பு அதிக ரிக்கக்கூடும் என இப்பகுதி விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். பூலாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை நீரால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.