என் மலர்
உள்ளூர் செய்திகள்
கிருத்திகை முன்னிட்டு முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை
- பாலமுருகனுக்கு ஐப்பசி மாத கிருத்திகை முன்னிட்டு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாலமுருகன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.
நவ:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுக்கா கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள பாலமுருகனுக்கு ஐப்பசி மாத கிருத்திகை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் ,மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை கட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பாலமுருகன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாலமுருகன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.
அதேபோல் நன்செய் இடையாறு காவேரி ஆற்றங்கரை அருகே உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் உள்ள வள்ளி- தெய்வானை சமேத பாலமுருகன், கபிலர்மலையில் உள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியசாமி கோவில், பரமத்தியை அடுத்த பிராந்தகத்தில் 34.5 அடிஉயரத்தில் உள்ள ஆறுமுகக்கடவுள் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், பொத்தனூர் அருகே உள்ள பச்சமலை முருகன் கோவில், அனிச்சம்பாளையத்தில் உள்ள வேல் வடிவம் கொண்ட சுப்ரமணியர், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனி ஆண்டவர் கோவில், நன்செய்இடையார் திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், சுள்ளிப்பாளையம் அருகே அருணகிரி மலையில் உள்ள வள்ளி- தெய்வானை சமேத பாலசுப்ரமணியர், நன்செய் இடையாறு ராஜா சாமி கோவில், பேட்டை பகவதியம்மன் கோவிலில் உள்ள முருகப்பெருமான் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை–களும்,சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.