search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரியில்  விநாயகர் சிலை வைத்திருந்த  2 இடங்களில் தகராறு செய்த 6 பேர் கைது
    X

    கிருஷ்ணகிரியில் விநாயகர் சிலை வைத்திருந்த 2 இடங்களில் தகராறு செய்த 6 பேர் கைது

    • சிவா என்ற 10-ம் வகுப்பு மாணவன் நேற்று இரவு படுத்து தூங்கி கொண்டிருந்துள்ளான்.
    • குடிபோதையில் சென்ற ஆசிப், சலாவுதீன், சந்தோஷ், மோகன் ஆகியோர் சிறுவனை எழுப்பி தகராறு செய்து தாக்கினர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி பாரதியார் நகர் 4-வது தெருவில் விநாயகர் சிலை வைத்து பூஜை நடத்தி வருகின்றனர். இங்கு சுரேஷ் என்பவரது மகன் சிவா என்ற 10-ம் வகுப்பு மாணவன் நேற்று இரவு படுத்து தூங்கி கொண்டிருந்துள்ளான்.

    அப்போது அவ்வழியாக குடிபோதையில் சென்ற ஆசிப், சலாவுதீன், சந்தோஷ், மோகன் ஆகியோர் சிறுவனை எழுப்பி தகராறு செய்து தாக்கினர். இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் தரப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து ஆசிப் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல கிருஷ்ணகிரி அருகேயுள்ள மதகொண்டப்பள்ளியில் இந்து முன்னணி சார்பில் நாராயணன் (எ) கோழி நாராயணப்பா என்பவர் விநாயகர் சிலை வைத்து பூஜைகள் நடத்தி வருகிறார். அங்கு வந்த மகேஷ், மஞ்சுநாத், சைலஜா ஆகியோர் அப்பகுதியில் கொடிகள் கட்டக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் நாராயணப்பாவை தாக்கியதாகவும் கூறப்ப டுகிறது.

    இதுகுறித்து நாராய ணப்பா தந்த புகாரின்பேரில் தளி போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரேசன் வழக்கு பதிந்து மகேஷ், மஞ்சுநாத் 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×