என் மலர்
உள்ளூர் செய்திகள்
குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் டெங்கு தடுப்பு - சிறப்பு காய்ச்சல் முகாம்
- டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது
- கிராம பகுதிகளில் காய்ச்சல் மருத்துவ முகாம் நடை பெற்று வருகிறது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அதன் ஒரு கட்டமாக குறிஞ்சிப்பாடி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். அகிலா உத்தரவின் படி தினந்தோறும் குறிஞ்சிப்பா டி வட்டாரத்தி ற்குட்பட்ட கிராம பகுதிகளில் காய்ச்சல் மருத்துவ முகாம் நடை பெற்று வருகிறது. நேற்று கருங்குழி கிராமத்தில் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. வட்டார சுகாதார மேற்பா ர்வையாளர் (பொறுப்பு) பாண்டியராஜூ தலை மையில் சுகாதார ஆய்வா ளர் . கனகரத்தினம் மேற்பார்வையில் கொசு ஒழிப்பு பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று கொசு ஒழிப்பு பணிகள் மற்றும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மேற்கொள்ள பட்டது.காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டா ல் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று அங்குள்ள டாக்டர்களை அணுகி சிகிச்சை மற்றுமி ஆலோசனை பெற வேண்டும் என வடலூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர். கனிமொழி பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.அதேபோல குறிஞ்சி ப்பாடி வட்டாரம் பொன்ன ங்குப்பம் கிராமத்திலும் கொசு ஒழிப்பு பணிகள்
நடைபெற்றது. வட்டார சுகாதார மேற்பா ர்வையாளர் (பொறுப்பு) பாண்டியராஜூ தலைமை யில் சுகாதார ஆய்வாளர்கள் . ஜெயச்சந்திரன் மற்றும் கலாநிதி ஆகியோர் மேற்பார்வையில் கொசு ஒழிப்பு பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அழிக்கும் பணிகள் மேற்கொ ள்ள பட்டது. பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு அளிக்க பட்டது. முதிர் கொசுக்களை அழிப்பதற்கு புகைமருந்து தெளிக்கும் பணிகளை வடக்குத்து கிராம ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சலை குப்புசாமி துவக்கி வைத்தார்.