என் மலர்
உள்ளூர் செய்திகள்
பள்ளிப்பாளையம் நகராட்சியில் நாய்களுக்கு கருத்தடை
- நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
- 3 நாட்கள் நாய்களை அறைகளில் அடைத்து, சிகிச்சை அளித்த பின், நாயக்கள் எந்த இடத்தில் பிடிக்கப்பட்டதோ, அதே இடத்தில் சென்று விடப்படும் என நகராட்சி ஊழியர்கள் தெரிவித்தனர்.
பள்ளிப்பாளையம்:
பள்ளிப்பாளையம் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளது. அனைத்து வார்டுகளிலும் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் நாய் தொலை கட்டுபடுத்த, சேர்மன் செல்வராஜ், துணை சேர்மன் பாலமுருகனிடம் கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர்.இதனை தொடர்ந்து கடந்த மாதம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெருக்களில் சுற்றித் திரியும் தெருநாய்களை கணக்கெடுப்பு செய்யப்பட்டதில் 1089 நாய்கள் உள்ளது என தெரியவந்தது.
நேற்று முதல் நகராட்சி பகுதியில் உள்ள நாய்களை பிடித்து, சென்னையை சேர்ந்த தொண்டு நிறுவனம் மூலம், கோட்டக்காடு பகுதியில் கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் வெறிநாய் கடி தடுப்பூசி போடும் பணி துவக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 3 நாட்கள் நாய்களை அறைகளில் அடைத்து, சிகிச்சை அளித்த பின், நாயக்கள் எந்த இடத்தில் பிடிக்கப்பட்டதோ, அதே இடத்தில் சென்று விடப்படும் என நகராட்சி ஊழியர்கள் தெரிவித்தனர்.