search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீர்காழியில், அடுத்தடுத்து 6 கடைகளில் கொள்ளை
    X

    பணம் கொள்ளை போன கடைகளில் சோதனை செய்த போலீசார்.

    சீர்காழியில், அடுத்தடுத்து 6 கடைகளில் கொள்ளை

    • கல்லாவில் இருந்த ரூ.70 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர்.
    • ஜவுளி கடையில் இருந்த சி.சி.டி.வி. கேமராவை உடைத்து விட்டு தப்பி சென்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியின் பிரதான பகுதியான கடைவீதியில் காய்கறி மார்க்கெட் அமைந்துள்ளது. இந்த மார்க்கெட்டில் வாழைப்பழம் கடை வைத்து நடத்தி வருபவர் நல்லமுத்து.

    நேற்று வழக்கம்போல் தனது கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.இன்று காலை கடையை திறக்க வந்தார்.அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

    உள்ளே சென்று பார்த்த போது கல்லாப்பெட்டியில் இருந்த ரூபாய் 70 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. மேலும் அதே மார்க்கெட் பகுதியில் உள்ள பாஸ்கரன் என்பவரது பூக்கடை கதவினை உடைத்து மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்டனர்.

    அருகில் காமராஜர் வீதி உள்ள ராகுல் பழக்கடையில் புகுந்த மர்ம நபர்கள் அங்கே கல்லாப்பெட்டியில் இருந்த ரூபாய் 8000 யை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    அருகில் இருந்த நாராயணன் பூக்கடையில் இருந்த கல்லாப்பெட்டி எடுத்து சென்று சில மீட்டர் தூரத்தில் வீசிவிட்டு அதில் இருந்து செல்போனை திருடிய நபர்கள் அதன் அருகாமையில் இருந்த பேன்சி கடையில் புகுந்து திருட்டு முயற்சியில் ஈடுபட்டனர்.

    இதைப்போல் கடைவீதியில் இருந்த மற்றொரு பழக்கடையிலும் கல்லாப் பெட்டியில் இருந்த பணத்தையும் அருகில் இருந்த துணிக்கடையில் இருந்த சிசிடிவி கேமராவை உடைத்தும் தப்பிச் சென்றனர்.

    இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திருட்டு நடைபெற்ற கடைகளில் விசாரணை நடத்தினார்.

    மேலும் அப்பகுதியில் இருந்த சி சி டிவி கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    சீர்காழியின் பிரதான மக்கள் அதிகம் கூடும் மையப் பகுதியில் அடுத்தடுத்து 6 கடைகளில் மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் வணிகர்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இரவு நேர ரோந்து பணியை போலீசார் தீவிரப்படுத்தி கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×