search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சையில், சுமை தூக்கும் தொழிலாளர் சங்க கூட்டம்
    X

    கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் சந்திரகுமார் பேசினார்.

    தஞ்சையில், சுமை தூக்கும் தொழிலாளர் சங்க கூட்டம்

    • இந்திய உணவு கழக சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு இணையாக கூலி வழங்க வேண்டும்.
    • ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ரூ.4000 ஊக்க ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக தொழிலாளர் சங்கம் மற்றும் சுமைதூக்கும் தொழிலாளர் சங்கத்தின் மாநில நிர்வாக குழு கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு தொழிலாளர் சங்க மாநில துணைத் தலைவர் நாகேஷ், சுமை தூக்கும் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் சாமிக்கண்ணு ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில பொதுச்‌ செயலாளர் சந்திரகுமார்‌ சிறப்புரையாற்றினார்.

    இந்த கூட்டத்தில் கிடங்குகள், திறந்தவெளி சேமிப்பு நிலையங்களில் பணி புரியும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு , இந்திய உணவுக் கழக சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு இணையாக கூலி வழங்க வேண்டும், கொள்முதல் பணியாளர்கள் ஓய்வு பெறும் வயதை 60-ஆக உயர்த்த வேண்டும், ‌ ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ரூ. 4000 ஊக்க ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் மாநில பொருளாளர் கோவிந்தராஜன், மாநில செயலாளர்கள் கிருஷ்ணன், முருகேசன், ‌கலியபெருமாள், தொழிலாளர் சங்க திருவாரூர் மாவட்ட செயலாளர் செல்வம், தஞ்சாவூர் மாவட்ட பொருளாளர் தியாகராஜன், சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு, மாவட்ட செயலாளர்கள் சிவகுருநாதன், ஆனந்தன் , புஷ்பநாதன், சம்பத், ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×