என் மலர்
உள்ளூர் செய்திகள்
தஞ்சையில், தமிழர் தொன்மை வரலாற்று சிறப்பு மாநாடு- பழ.நெடுமாறன் தகவல்
- அண்ணா நூற்றாண்டு அரங்கில் வருகிற 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் மாநாடு நடக்கிறது.
- மாநாட்டில் 10 அறிஞர்களுக்கு உலக பெருந்தமிழர் விருது வழங்கப்படுகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சையில் உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-
உலகத்தமிழர் பேரமை ப்பின் 10-ம் ஆண்டு மாநாடு தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா நூற்றாண்டு அரங்கில் வருகிற 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடக்கிறது.
2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் தமிழ் அறிஞர்களும், தொல்லாய்வு அறிஞர்களும் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.
முதல் நாள் மாநாட்டுக்கு அரசு தலைமை தாங்குகிறார்.
சிவசுப்பிரமணியன் தொடக்க உரை ஆற்றுகிறார். 2-ம் நாள் கருத்தரங்கிற்கு தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பால சுப்பிரமணியம் தலைமை தாங்குகிறார்.
வக்கீல் பானுமதி தொடக்க உரை ஆற்றுகிறார். இதில் பல்வேறு அறிஞர்கள் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.
மாநாட்டில் தமிழுக்கு அயராது தொண்டாற்றி வரும் 10 அறிஞர்களுக்கு உலக பெருந்தமிழர் விருது வழங்கப்படுகிறது.
முதல்நாள் விருந்தளிப்பு விழாவிற்கு கவிஞர் காசி ஆனந்தன், 2-ம் நாள் நடைபெறும் விழாவிற்கு சு.வெங்கடேசன் எம்.பி. ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள்.
விருதுகளை நான் வழங்குகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.