என் மலர்
உள்ளூர் செய்திகள்
தமிழகத்தில் கடந்த 8 மாதத்தில் காற்றாலை மூலம் 10 ஆயிரம் மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி
- ஆகஸ்ட் 1-ந் தேதி முதல் ஆகஸ்ட் 15-ந் தேதி வரை தினமும் 100 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.
- இந்த ஆண்டு காற்று பருவ காலத்தில் மொத்தம் 10 ஆயிரம் மில்லியன் யூனிட் மின்சாரம் தமிழகத்தில் உள்ள காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
கோவை :
காற்றாலை மின்உற்பத்தி யில் தமிழகம் தேசிய அளவில் சிறந்து விளங்குகிறது. தமிழகத்தில் காற்றாலைகள் மூலம் மொத்தம் 8,500 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்பு வசதிகள் உள்ளன. ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில் தொடங்கி அக்டோபர் வரை காற்று பருவகாலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கால கட்டத்தில் தமிழகத்தின் தினசரி மொத்த மின்தேவையில் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் அதிக அளவில் பங்களிக்கும்.
இந்த ஆண்டு காற்று பருவ காலம் மார்ச் மாதமே தொடங்கியது. காற்றின் வேகம் சீராக இருந்த காரணத்தால் தொடர்ந்து அதிக மின்சாரம் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டது. ஆகஸ்ட் 1-ந் தேதி முதல் ஆகஸ்ட் 15-ந் தேதி வரை தினமும் 100 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.
ஆடி மாதத்தில் தமிழகத்தின் தினசரி மின்நுகர்வில் 80 சதவீதத்துக்கு மேல் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம் பங்களிப்பு செய்தது. இந்த ஆண்டு காற்று பருவகாலம் அக்டோபர் 31-ந் தேதியுடன் நிறை வடைந்ததாகவும் மொத்த மின் உற்பத்தி சிறப்பாக இருந்ததாகவும் மின்உற்பத்தியாளர்கள் தெரிவித் துள்ளனர்.இது குறித்து இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கஸ்தூரி ரங்கையன் கூறியதாவது:- எதிர்வரும் காலங்களில் மின் தேவையை பூர்த்தி செய்வதில் புதுப்பிக்க தக்க ஆற்றல் உற்பத்தித்துறை மிக முக்கிய பங்கு வகிக்கும். இந்த ஆண்டு காற்று பருவ காலம் மார்ச் 15-ந் தேதி தொடங்கியது. அக்டோபர் 31-ந் தேதியுடன் நிறை வடைந்துள்ளது. இந்த ஆண்டு காற்று பருவ காலத்தில் மொத்தம் 10 ஆயிரம் மில்லியன் யூனிட் மின்சாரம் தமிழகத்தில் உள்ள காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
மின்சாரத்தை வீண டிக்காமல் தமிழக மின்வாரியம் உரிய முறை யில் பெற்றுக்கொண்டது. ஏற்கனவே தமிழக அரசு சார்பில் பெறப்பட்ட மின்சாரத்துக்கு நிலுவை வைக்கப்பட்டுள்ள தொகை இதுவரை 2 தவணைகளாக மின்உற்பத்தி யாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகையும் தொடர்ந்து வினியோகி க்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையை காற்றாலை மின்உற்பத்தியாளர்கள் சங்கம் வரவேற்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.