என் மலர்
உள்ளூர் செய்திகள்
வேதாரண்யத்தில், ஆர்ப்பாட்டம்
- பருவம் தவறி பெய்த மழையால் பயறு, எள், கடலை பயிர்கள் பாதிப்படைந்துள்ளது.
- தண்ணீரின்றி பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட நிர்வாகக்குழு நாராயணன், ஒன்றிய துணைச் செயலாளர் பாலகுரு ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் உச்சநீதிமன்ற தீா்ப்பின் படி ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தமிழகத்திற்கு தர வேண்டிய காவிரி நீரை கர்நாடகா அரசு உடன் திறந்து விட வேண்டும்.
கடந்த 2 மாதங்களாக கூட்டு குடிநீர் சரிவர வராத காரணத்தினால் அவதிப்படும் கிராம மக்களை பாதுகாத்திட பருவம் தவறி பெய்த மழையால் பயறு, எள், கடலை மற்றும் பாதிப்படைந்த பயிர்களுக்கு தமிழக அரசால் ஒதுக்கப்பட்ட நிதியை உடன் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
தண்ணீர் இல்லாமல் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் மாவட்ட செயலாளர் சிவகுரு.பாண்டியன் சிறப்புரையாற்றினார். விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் செங்குட்டுவன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் முருகானந்தம், மாவட்டக்குழு கருணாநிதி, விவசாய சங்க ஒன்றியச் செயலாளர் அருள்ஒளி, நகரச் செயலாளர் ராஜேந்திரன்.
இளைஞா் பெருமன்ற மாவட்டத் தலைவர் கார்த்திகேயன், ஒன்றியச் செயலாளா் பழனியப்பன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியத் தலைவர் இளவரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.