என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
விருத்தாசலத்தில் இளம்பெண் மாயம் தாய் போலீசில் புகார்
By
மாலை மலர்26 Nov 2022 3:48 PM IST

- வீட்டை விட்டு வெளியே சென்று வருவதாக கூறி விட்டுச் சென்றார்
- புகாரை பெற்றுக் கொண்ட விருத்தா சலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
விருத்தாசலம் தெற்கு பெரியார் நகரை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி. இவரது மகள் சிவப்பிரியா (வயது 24). இவர் கடந்த 24-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்று வருவதாக கூறி விட்டுச் சென்றார் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இது பற்றி விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் தாய் உமா மகேஸ்வரி புகார் அளித்தார். அதில் விருத்தா சலத்தை அடுத்த எருமனூரை சேர்ந்த அஜித்குமார் என்ற வாலிபர் தனது மகளை கடத்திச் சென்று விட்டதாகவும், அவரிடம் இருந்து தனது மகளை மீட்டுக் கொடுக்குமாறும் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட விருத்தா சலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
X