என் மலர்
உள்ளூர் செய்திகள்

விருத்தாசலத்தில் போலீசார் அதிரடி மணல் கடத்திய மாட்டுவண்டிகள்- ஆட்டோ பறிமுதல்

- விருத்தாசலத்தில் போலீசார் அதிரடி மணல் கடத்திய மாட்டுவண்டிகள்- ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.
- நேற்று மணிமுத்தாறில் மணல் கடத்திவிட்டு மாட்டுவண்டிகள் செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
கடலூர்:
விருத்தாசலம் மணிமுத்தாற்றில் மணல் திருட்டு சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. காவல்துறையினர் ரோந்து பணியை தீவிர படுத்தியுள்ள போதும், மணல் கடத்தல்காரர்கள் தொடர்ந்து மணல் கொள்ளையில் ஈடுப்பட்டு வருவது நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று மணிமுத்தாறில் மணல் கடத்திவிட்டு மாட்டுவண்டிகள் செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஆற்றில் மணல் கடத்திவிட்டுஆலடி ரோடு வழியாக வந்து கொண்டிருந்த 2 மாட்டு வண்டிகளை போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது மாட்டு வண்டிகளை ஓட்டி வந்தவர்கள் வண்டிகளை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடினர். அதேபோல விருத்தாசலம் பூதாமூர் அருகே உள்ள ஏனாதிமேடு என்ற பகுதியில் மணல் கடத்தலில் ஈடுப்பட்ட ஆட்டோ ஒன்றை பிடிக்க போலீசார் பிடிக்க முயன்றபோது ஆட்டோவை அங்கேயே விட்டுவிட்டு ஓட்டி வந்த நபர் தப்பி ஓடினார். மணல் கடத்தலில் ஈடுபட்ட 2 மாட்டுவண்டிகள் மற்றும் டிராக்டரை பறிமுதல் செய்தனர்.