என் மலர்
உள்ளூர் செய்திகள்
மீஞ்சூர் பேரூராட்சி சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல் திறப்பு
By
மாலை மலர்21 May 2023 4:42 PM IST

- பொதுமக்களுக்கு கோடை கால தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
- நிகழ்வில் வார்டு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பொன்னேரி:
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டேரிக்கும் நிலையில் பொது மக்களின் தண்ணீர் தாகம் தீர்க்க பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மீஞ்சூர் பேரூராட்சி சார்பில் மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ் செயல் அலுவலர் வெற்றி அரசு வழிகாட்டுதலின் பேரில் பொதுமக்களுக்கு கோடை கால தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது. பேரூராட்சி அலுவலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் பந்தல் திறக்கபட்டன இதனை மீஞ்சூர் பேரூராட்சி துணை தலைவர் அலெக்சாண்டர் துவக்கி வைத்தார். இதில் வார்டு உறுப்பினர்கள் அபுபக்கர், பாஸ்கர், ஜெயலட்சுமி தன்ராஜ், கவிதா சங்கர், சங்கீதா சேகர், ஜெயசங்கர், சுகண்யா, வெங்கடேசன், சுகாதார மேற்பார்வையாளர் கோபி, ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story
×
X