என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![தொடர் மழையால் செங்கல் உற்பத்தி பாதிப்பு தொடர் மழையால் செங்கல் உற்பத்தி பாதிப்பு](https://media.maalaimalar.com/h-upload/2023/09/02/1943182-12.webp)
தொடர் மழையால் செங்கல் உற்பத்தி பாதிப்பு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- கும்பகோணத்தில் தொடர்ந்து 2 நாட்களாக மழை பெய்தது.
- மழைபெய்ய தொடங்கியதும் பணியாளர்கள் செங்கற்களை தார்ப்பாய் கொண்டு மூடினர்.
கும்பகோணம்:
கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பகலில் வெயில் அடிப்பதும், மாலையில் மழைபெய்வதுமாக இருந்து வருகிறது.
கும்பகோணத்தில் தொடர்ந்து 2 நாட்களாக மழை பெய்தது.
இதனால் வெயிலை நம்பி செங்கல் உற்பத்தியில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு இந்த மழை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தயார் செய்து சூடுபடுத்த அடுக்கி வைக்கப்பட்டிருந்த செங்கற்கள் அனைத்தும் தண்ணீரில் நனைந்து வீணாக தொடங்கியது.
இதனால் செங்கல் காலவாயில் தங்கியிருந்து வேலைபார்க்கும் பணியாளர்கள் மழைபெய்ய தொடங்கியதும் செங்கற்களை தார்ப்பாய் கொண்டு மூடினர்.
உற்பத்திக்காக வைக்கப்பட்டிருந்த மண் மழைநீரில் கரைந்து ஓடியது. பல இடங்களில் சூளைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. காய வைக்கப்பட்டிருந்த செங்கற்கள் மழையில் நனைந்து சேதமடைந்து வருகின்றன.
இதனால் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக சூளை உரிமையாளர்கள் வேதனையுடன் கூறினர்.