என் மலர்
உள்ளூர் செய்திகள்
சேலத்திற்கு வட மாநிலங்களில் இருந்து பூண்டு வரத்து அதிகரிப்பு
- அக்டோபர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை பூண்டு சாகுபடி அதிகளவில் நடைபெறும்.
- சேலத்திற்கு 30 முதல் 40 டன் பூண்டு விற்பனைக்கு வருகிறது.
சேலம்:
மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பூண்டு அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த மாநிலங்களில் ஆண்டு முழுவதும் பூண்டு சாகுபடி நடக்கிறது. குறிப்பாக அக்டோபர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை பூண்டு சாகுபடி அதிகளவில் நடைபெறும்.
கடந்த ஆண்டு பெய்த மழையால் பூண்டு அமோக விளைச்சலை தந்துள்ளது. இதனால் அங்கிருந்து சேலம் மார்க்கெட்டுக்கு பூண்டு வரத்து அதிகரித்துள்ளது. அந்த வகையில் வட மாநிலங்களில் இருந்து நாள் ஒன்றுக்கு சேலத்திற்கு 30 முதல் 40 டன் பூண்டு விற்பனைக்கு வருகிறது. இவ்வாறு விற்பனைக்கு வரும் பூண்டு சில்லரை வியாபாரிகளால் வாங்கிச் சென்று விற்பனை செய்யப்படுகிறது. பூண்டு விலை சரிவால் வியாபாரிகள் சிலர் சரக்கு ஆட்டோவில் வைத்து விற்பனை செய்கின்றனர். அவர்கள் சிறிய ரக பூண்டு 3 கிலோ ரூ.100 என்றும் நடுத்தர அளவுள்ள பூண்டு 2 கிலோ ரூ. 100 என்றும் விற்பனை செய்கின்றனர். பூண்டு விலை சரிவால் பொதுமக்கள் கிலோ கணக்கில் வாங்கிச் செல்வதால் விற்பனை களை கட்டியுள்ளது.