search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
    X

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

    • விவசாயிகளின் போராட்ட கோரிக்கைகளை ஒப்புதல் அளித்தபடி உடன் அமல்படுத்த வேண்டும்.
    • குறுவை சாகுபடிக்கு காப்பீட்டு திட்ட இழப்பீட்டை வழங்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நெல் குவிண்டாலுக்கு ரூ.2500 வழங்க வலியுறுத்தி டார்ச் லைட் அடித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் திருமருகல் சந்தைப்பேட்டை கடைத்தெருவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் தங்கையன், ஒன்றிய தலைவர் மாசிலாமணி, துணை தலைவர் தியாகராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    கட்சியின் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் ஆர்ப்பாட்டத்தில் பேசினார். இதில் 13 மாத கால விவசாயிகளின் போராட்ட கோரிக்கைகளை ஒப்புதல் அளித்தபடி உடன் அமல்படுத்த வேண்டும், கோயில், மடம், அறக்கட்டளை, வக்போர்டு குத்தகை விவசாயிகள் தொடர் பேரிடர் பாதிப்புகளின் குத்தகை பாக்கியை தள்ளுபடி செய்ய வேண்டும்.

    குறுவை சாகுபடிக்கு காப்பீட்டுத் திட்ட இழப்பீட்டை வழங்க வேண்டும், 2021-22 சம்பா காப்பீட்டுத் தொகையை உடனே வழங்க வேண்டும், வேளாண் இடு பொருள்களான யூரியா, டி.ஏ.பி பொட்டாஷ் உரங்களை கூட்டுறவு வங்கி மூலம் தங்கு தடையின்றி வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    இதில் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×