என் மலர்
உள்ளூர் செய்திகள்
மகளிர் உரிமை திட்ட விண்ணப்பங்களை கள ஆய்வு செய்யும் பணிகள் தீவிரம்
- மாணவர்களின் கற்றல் திறன் வளர்ந்து தேர்ச்சி சதவீதம் உயரும்.
- ரூ.12 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பீட்டில் அண்ணாகுளம் மேம்படுத்தப்பட்டு வருவதை ஆய்வு செய்தார்.
சீர்காழி:
சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஒன்றியத்தில் ரூ.48 இலட்சத்து 33 ஆயிரம் மதிப்பீட்டிலான வளர்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்ளப்படுவதை வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள மகேந்திரப்பள்ளி, புளியந்துறை ஆகிய பகுதிகளில் ரூ.48 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பீட்டிலான வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆச்சாள்புரம் அரசு மேல்நிலைப் பள்ளியினை பார்வையிட்டு, 12-ம் வகுப்பு மாணவ, மாணவியர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்து, வாசிப்பு பழக்கத்தை உருவாக்கி, தினசரி பாடங்களை அன்றைக்கே நிறைவு செய்யும் வகையில் பயிற்சி அளிக்க வேண்டும்.
அப்போது தான் மாணவர்களின் கற்றல் திறன் வளர்ந்து, தேர்ச்சி சதவீதம் உயரும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர், மகேந்திர ப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளதை பார்வையிட்டு, பணிகளின் தரத்தினை ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து, புளியந்துறை கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.8 லட்சத்து 9 ஆயிரம் மதிப்பீட்டில் சமையல் கூடம் கட்டப்பட்டு வருவதையும், புளியந்துறை கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பீட்டில் அண்ணாகுளம் மேம்படுத்தப்பட்டு வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், மகேந்திர ப்பள்ளி மற்றும் புளியந்துறை கிராமங்களில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பப் பதிவு முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களை கள ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதையும் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா, ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தியாகராஜன், அருள்மொழி, ஊராட்சி மன்ற தலைவர் இளவரசி சிவபாலன் மற்றும் ஒன்றிய பொறியாளர்கள் தாரா, பூரணசந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.