என் மலர்
உள்ளூர் செய்திகள்
செங்கோட்டை பகுதியில் பிசான சாகுபடி தீவிரம் - அறுவடை எந்திரம் வாடகை உயர்வால் விவசாயிகள் வேதனை
- செங்கோட்டையில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பெரிய குளமானது 210 ஏக்கர் பரப்பளவு கொண்டது.
- தற்போது ஆள்பற்றாக்குறை மற்றும் எந்திர பற்றாக்குறையால் அறுவடையை தள்ளிபோட்டு வந்தனர்.
செங்கோட்டை:
செங்கோட்டையில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பெரிய குளமானது 210 ஏக்கர் பரப்பளவு கொண்டது.
இந்த குளத்தின் முலம் 600 ஏக்கர் நேரடி பாசன வசதி பெற்று கார், பிசான, பூமகசூல் என 3 சாகுபடிக்கும் இந்த குளத்து பாசன வசதி பெற்று விவசாயம் செய்து வருகின்றனர்.
இப்பகுதி விவசாயிகள் இந்த குளமானது கோடை காலங்களை தவிர மற்ற காலங்களில் வற்றாமல் இருப்பதாகவும் கூறுகின்றனர்.
குளம் நிரம்பிய காலங் களில் கரை வழியாக நடந்து செல்லும் போது காற்றின் வேகத்தால் கடல் அலை போல் காட்சியளிப்பதுதோடு மட்டுமல்லாது இரு சக்கரவாகன ஓட்டிகள் கரையை கடப்பதே பெரிய சவாலாக அமையும், இந்த குளத்தை நம்பி இலத்தூர், திருவெட்டியூர், நெடுவயல், அச்சன்புதூர், கொடிகுறிச்சி, சித்திராபுரம், சிவராமபேட்டை உள்ளிட்ட ஏராளமான கிராம மக்கள் வாழ்வாதாரம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்தாண்டு சரியான நேரத்தில் மேற்குக்தொடர்ச்சி மலையில் பெய்த தென்மேற்கு, வடகிழக்கு பருவ மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்த நிலையில் மேற்குத்தொடர்ச்சி அடிவார பகுதியான அடவிநயினார் அணை நீர்பிடிப்பு பகுதி அணையின் முழு கொள்ளளவு நிரம்பி மறுகால் வழியாக உபரி நீர் குளங்கள், ஏரிகள் வேகமாக நிரம்பியது.
அதனைதொடர்ந்து நூற்றுகணக்கான ஏக்கர் நிலங்களில் பிசான சாகுபடிக்கான டிலெஸ் பொன்னி ரக நெல்லை பெரும்பாலோனோர் விதைகளை பாவி ஆயத்த வேலைகளை தொடங்கினர்.
ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்து தற்போது அறுவடைக்கு தயாரான நிலையில் தமிழகத்தில் தென்மாவட்டங்களில் அறுவடைக்கு ஆள்பற்றாக்குறையால் அரசு அறுப்பு எந்திரம் சாதாரண வாகனத்திற்கு குறைந்த அளவில் ரூ.1,000 அரசு நிர்ணயித்த தொகையால் விவசாயிகள் பயன் பெற்றனர்.
இந்நிலையில் தற்போது அரசு வாகன வரத்து இல்லாததால் ஆள்பற்றாக்குறை மற்றும் எந்திர பற்றாக்குறையால் அறுவடையை தள்ளிபோட்டு வந்தனர்.
இந்நிலையில் தற்போது ஏராளமான தனியார் எந்திரங்கள் இந்த பகுதியில் வந்துள்ளதால் அரசு விலையைகாட்டிலும் இரு மடங்கு அதிக கட்டணமாக கூடுதலாக சாதாரண வண்டிக்கு ரூ.2ஆயிரமும் செயின் வண்டிக்கு, ரூ.3ஆயிரம் என கொடுத்து வேறு வழியின்றி அதிக பணம் செலவழித்து அறுவடையை ெதாடங்கி தீவிரபடுத்தி வருகின்றனர்.
இதனால் பெருமளவில் அச்சன்புதூர், விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். ஏற்கனவே விளைந்த நெல்லுக்கு போதிய விலை இல்லாத நிலையில் வரும் கோடை மழைக்கு முன் விளைந்த நெற்கதிர்களை அறுவடை செய்ய வேண்டிய கட்டாயத்தால் தற்போது வண்டி வாடகை கூடுதல் சுமையாக உள்ளது . இதனால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.