என் மலர்
உள்ளூர் செய்திகள்

சொத்து வரிக்கான விண்ணப்பங்களை சமா்ப்பிக்க அழைப்பு
- நாமக்கல் நகராட்சி பகுதிகளில் சொத்துவரி சீராய்வுப் பணிகள் முடிவுற்றுள்ளன.
- தற்போது புதிய சொத்துவரி விதிப்புகள் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் நகராட்சி ஆணையாளா் கி.மு, சுதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் நகராட்சி பகுதிகளில் சொத்துவரி சீராய்வுப் பணிகள் முடிவுற்றுள்ளன. தற்போது புதிய சொத்துவரி விதிப்புகள் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் புதிதாக சொத்து வரி விதிக்க வேண்டிய இனங்களுக்கான விண்ணப்பங்களை நகராட்சியில் அலுவலக வேலை நாட்களில் பெற்று உரிய ஆவணங்களுடன் சமா்ப்பித்து புதிதாக வரி விதிப்பு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story