search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    ஜல்லிக்கட்டு நடைபெறும் மைதானத்தை கலெக்டர், எஸ்.பி. ஆய்வு
    X

    ஜல்லிக்கட்டு நடைபெறும் மைதானத்தை கலெக்டர், எஸ்.பி. ஆய்வு

    • தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்கிறார்.
    • பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங், போலீஸ் எஸ்.பி கலைச்செல்வன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம், ஜங்களா–புரத்தில், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) ஜல்லிக்–கட்டு நடைபெற உள்ளது.

    தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். இதனையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள மைதானத்தில், மேற்கொள்–ளப்–பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங், போலீஸ் எஸ்.பி கலைச்செல்வன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    ஜல்லிக்கட்டு நடை–பெறும் மைதானத்தில் வாடிவாசல், ஜல்லிக்கட்டு வீரர்கள் மைதானத்துக்குள் வருவதற்கு தனியாக பாதை, மைதானத்தில் பார்வையாளர்கள் நுழையாமல் தடுக்கும் வகையில், இரும்பு தடுப்பு, காளைகள் வெளியேறும் இடத்தில், மைதானத்தை சுற்றிலும் இரண்டு அடுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. காளைகளை உரிமையாளர்கள் எளிதில் பிடிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    ஜல்லிக்கட்டுக்கு வரும் காளைகளை ஆய்வு செய்ய கால்நடை பராமரிப்பு துறையினருக்கு தனியாக பந்தல் அமைத்து இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. மருத்துவ குழுவினர் அவசர சிகிச்சை அளிக்க தனியாக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ஜல்லிக்கட்டு காளைகள் வரும் பாதையில், பாதை முழுவதும் பந்தல் அமைக்கப்பட்டுவருகிறது, ஆம்புலன்ஸ் வாகனங்கள் வருவதற்கு தனியாக வழி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பார்வையாளர்கள், முக்கிய பிரமுகர்கள் அமருவதற்கும் தனியாக இடம் ஒதுக்கி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் வீரர்களுக்கு பாதுகாப்பாக தேங்காய்நார் சரியான முறையில் பரப்ப வேண்டும் என்றும், தேவை

    யான ஒலிபெருக்கி அமைப்பு கள் ஏற்பாடு செய்யவும், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அரசு அறிவுறுத்தியுள்ள விதிமுறை களின்படி, தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ஜல்லிக்–கட்டு போட்டி ஏற்பாட்டா ளர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். நிகழ்ச்சி யில், நாமக்கல் ஆர்.டி.ஓ. மஞ்சுளா, டி.எஸ்.பி. சுரேஷ் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள், ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×