என் மலர்
உள்ளூர் செய்திகள்

வழிபாடு மேற்கொண்ட ஜப்பான் நாட்டினர்.
சீர்காழி சட்டைநாதர் கோவிலில் ஜப்பான் நாட்டினர் வழிபாடு
- திருவண்ணாமலை உள்பட பல கோவில்களில் யாக வேள்வி, பூஜை.
- கும்பகோணம் அருகே பல சிவ ஸ்தலங்களில் யாகபூஜை நடத்தி வழிபாடு.
சீர்காழி:
ஜப்பானில் கடந்த 30 ஆண்டுகளாக வசித்து வரும் தமிழ் ஆர்வலர் கோபால் பிள்ளை சுப்ரமணியன் தலைமையில் ஜப்பானைச் சேர்ந்த குருஜி பாலகும்ப குருமுனி எனும் தக்காயூகி உள்ளிட்ட 15 பேர் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டு உலக அமைதிக்காக தமிழகத்தில் திருவண்ணாமலை உள்பட பல கோவில்களில் யாக வேள்வி, பூஜைகள் செய்து வருகின்றனர்.
நாடி ஜோதிடர் அடையார் கல்யாணசுந்தரம் வழிகாட்டலின் மூலம் கும்பகோணம் அருகே பல சிவ ஸ்தலங்களில் யாக பூஜை நடத்தி வருகிறார்கள்.
அதன் ஒரு பகுதியாக சீர்காழி சட்டைநாதர் கோவிலில் ஜப்பான் நாட்டினர் சாமி தரிசனம் செய்தனர்.
முன்னதாக பிரம்மபுரீஸ்வரர் சுவாமி, திருநிலைநாயகி அம்மன், சட்டநாதர் சுவாமி, தோணியப்பர், திருஞானசம்பந்தர் சந்நிதிகளில் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
Next Story