என் மலர்
உள்ளூர் செய்திகள்

தஞ்சையில் அ.தி.மு.க. சார்பில் பொது மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
- தஞ்சை மேலவீதியில் வைக்கப்பட்ட ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- பொது மக்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு தஞ்சை மேல வீதியில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதா படத்திற்கு மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை திருஞானம், பால்வளத் தலைவர் காந்தி ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டதுபின்னர் முன்னாள்மேயர் சாவித்ரி கோபால், கவுன்சிலர் கோபால் ஆகியோர் ஏற்பாட்டின்படி பொது மக்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் எம்.ஜி.ஆர் மன்ற இணை செய லாளர் ராஜமாணிக்கம், கூட்டுறவு அச்சகத் தலைவர் புண்ணி யமூர்த்தி, பகுதி செயலா ளர் சாமிநாதன், மாண வரணி முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story