என் மலர்
உள்ளூர் செய்திகள்
ஜெயலலிதா பிறந்தநாள் விழா; முதியோர் இல்லத்தில் உணவு வழங்கி கொண்டாட்டம்
- ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
- ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தஞ்சாவூர்:
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி தஞ்சை மேம்பாலம் அரசினர் காது கேளாதோர் பள்ளியில் அ.ம.மு.க சார்பில் துணை பொது செயலாளர் எம்.ரெங்கசாமி தலைமையில் தஞ்சாவூர் மாநகர் மாவட்ட செயலாளர் ப.ராஜேஸ்வரன் முன்னிலையில் காலை உணவு வழங்கப்பட்டது.
தொடர்ந்து, கல்லுக்குளம் ஓசோனம் முதியோர் இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது. பின்னர், நாஞ்சிக்கோட்டை ஈ.பி.காலனியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து ரெயிலடியில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில் மாவட்ட அவை தலைவர் விருதாச்சலம், அம்மா பேரவை செயலாளர் ராமதாஸ், வர்த்தக அணி முரளி, பொதுக்குழு உறுப்பினர் அய்யாவு (எ) வேலாயுதம், செயற்குழு உறுப்பினர் கீதா சேகர், வக்கீல் செந்தில், பூக்கடை பகுதி செயலாளர் செந்தில், ஒன்றிய செயலாளர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை தஞ்சாவூர் மாநகர மாவட்ட அ.ம.மு.க.வினர் செய்திருந்தினர்.