என் மலர்
உள்ளூர் செய்திகள்
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நாங்குநேரி மாணவருக்கு ஜான் பாண்டியன் ஆறுதல்
- சக மாணவர்களால் தாக்கப் பட்ட பள்ளி மாணவன் சின்னத்துரை , அவரது சகோதரி சந்திரா செல்விக்கு நெல்லை பல்நோக்கு மருத்துவமனை யில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- ஒரே போலீஸ் நிலையங்களில் 5 முதல் 10 வருடங்கள் வரை பணிபுரியும் உளவு பிரிவு போலீசார் மற்றும் மற்ற போலீசார்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என ஜான் பாண்டியன் கூறினார்.
நெல்லை:
நாங்குநேரியில் சக மாணவர்களால் தாக்கப் பட்ட பள்ளி மாணவன் சின்னத்துரை மற்றும் அவரது சகோதரி சந்திரா செல்விக்கு நெல்லை பல்நோக்கு மருத்துவமனை யில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் 2 பேரையும் இன்று தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
அப்போது மாநில துணை பொதுச்செயலாளர் நெல்லையப்பன், மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன், மாநகர் மாவட்ட செயலாளர் துரைப்பாண்டி யன், மாநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துப்பாண்டி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஜான்பாண்டியன் நிருபர்க ளிடம் கூறியதாவது:-
பள்ளி மாணவர் சின்னத் துரை மீது ஜாதி ரீதியில் தாக்குதல் நடத்தப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழகத்தில் ஒரு சில குக்கிராமங்களில் இது போன்ற சம்பவங்கள் நடக்கிறது.
இதனை காவல்துறை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். தற்போது மாணவருக்கு நல்ல சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பள்ளி, கல்லூரி கால கட்டங்களிலேயே மாணவர்கள் இடையே இது போன்ற ஜாதி மோதல், வன்மம் போன்றவை ஏற்படுகிறது. இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு ஒரு சில ஆசிரியர்களும் துணை போகிறார்கள். அவர்களையும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளிகளில் ஜாதி கயிறு கட்டக்கூடாது என்பதை பள்ளி நிர்வாகம் உன்னிப் பாக கவனிக்க வேண்டும். பள்ளி மாணவர் தாக்கப் பட்டதற்கு காவல்துறை தான் காரணம்.
ஒரே போலீஸ் நிலையங்களில் 5 முதல் 10 வருடங்கள் வரை பணிபுரியும் உளவு பிரிவு போலீசார் மற்றும் மற்ற போலீசார்களை இடமாற்றம் செய்ய வேண்டும்.
மாணவர் விவகாரத்தில் ஒரு நபர் கமிஷன் என்பது கண்துடைப்பு. நீட் மசோதா குறித்து தி.மு.க. அரசு மாணவர்களை குழப்புகிறது. மாணவர்கள் தற்கொலை செய்யும் முடிவுக்கு வர வேண்டாம். நன்றாக படியுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.