search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இளம் விஞ்ஞானி திட்டத்தில் சேரபள்ளி மாணவ-மாணவிகளுக்கு இஸ்ரோ அழைப்பு
    X

    இளம் விஞ்ஞானி திட்டத்தில் சேரபள்ளி மாணவ-மாணவிகளுக்கு இஸ்ரோ அழைப்பு

    • அரசு பள்ளிகள், அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகள் 1000-க்கும் மேல் உள்ளன. இப்பள்ளிகளில் ஏராள மான மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள்.
    • மத்திய அரசின் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) யுவிகா என்ற இளம் விஞ்ஞானி திட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு அறிமுகம் செய்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகள் 1000-க்கும் மேல் உள்ளன. இப்பள்ளிகளில் ஏராள மான மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள்.

    இந்த நிலையில் பள்ளி மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் மத்திய அரசின் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) யுவிகா என்ற இளம் விஞ்ஞானி திட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு அறிமுகம் செய்தது.

    இந்த திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் மற்றும் செய்முறை விளக்கப் பயிற்சிகள் அளிக்கப்படும். இதற்காக நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் ஆண்டுதோறும் தலா 3 பேர் தேர்வு செய்யப்படுவர். அதன்படி நடப்பு ஆண்டுக்கான யுவிகா பயிற்சி மே மாதம் 15-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

    இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு இன்று தொடங்கி வருகிற ஏப்ரல் மாதம் 3-ந்தேதி வரை மேற்கொள்ளப்பட உள்ளது. விருப்பமுள்ள பள்ளி மாணவர்கள் www.isro.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க லாம்.

    பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க முடியும். பயிற்சிக்கு தேர்வாகும் மாணவர்களின் தற்காலிக பட்டியல் ஏப்ரல் மாதம் 10-ந்தேதி வெளியிடப்படும். பின்னர், தேர்ச்சி பெற்ற அந்த மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களை மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். அதன்பின், சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, இறுதிப்பட்டியல் ஏப்ரல் 20-ந்தேதி வெளியாகும். தேர்வாகும் மாணவர்க ளுக்கு திருவனந்தபுரம், ஸ்ரீஹரிகோட்டா உள்ளிட்ட இஸ்ரோவின் 7 ஆய்வு மையங்களில் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

    Next Story
    ×