என் மலர்
கள்ளக்குறிச்சி
- மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலரு மான ஷ்ரவன் குமார் முன்னிலை வகித்தார்.
- 18 வயது நிரம்பியவர்களின் பெயர்களை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் வாக்காளர் பட்டி யல் சிறப்பு சுருக்க திருத்தம் தொடர்பான ஆலோ சனை கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்குகள்ளக்குறிச்சி மாவட்ட வாக்காளர் பட்டி யல் மேற்பார்வையாளரும், தமிழ்நாடு ஜவுளித்துறை ஆணையருமான வள்ளலார் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலரு மான ஷ்ரவன் குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட வாக்காளர் பட்டியல் மேற் பார்வையாளர் கூறியதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட் டத்தில் கடந்த 5.01.2023 முதல் சிறப்பு சுருக்க திருத்த பணியின் கீழ் 18 வயது (01.01.2024 தகுதி நாளாக கொண்டு) நிரம்பியவர்க ளின் பெயர்களை வரைவு வாக்காளர் பட்டியல் வெளி யிடப்பட்டது. அதன்படி, இவ்வரைவு வாக்கா ளர் பட்டியலில் 27.10.2023 ன்படி உளுந்தூர் பேட்டை சட்டமன்ற தொகுதியில் 337 வாக்குச்சா வடிகளில், 2,86,422 வாக்கா ளர்களும், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் 305 வாக்குச்சாவடிகளில், 2,64,572 வாக்காளர்களும், சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் 300 வாக்குச்சா வடிகளில், 2,62,896 வாக்கா ளர்களும், கள்ளக்குறிச்சி (தனி) சட்டமன்ற தொகுதி யில் 332 வாக்குச்சாவடி களில், 2,76,131 வாக்காளர்க ளும் என மொத்தம் 1,274 வாக்குச்சாவடி மையங்க ளில் 10,90,021 வாக்காளர்கள் தற்போது வாக்காளர் பட்டி யலில் இடம்பெற்றுள்ளனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் தொடர்பாக கிராமங்கள் மற்றும் கல்வராயன்மலை பகுதிக்குட்பட்ட பகுதிகளில் அதிக அளவில் விழிப்பு ணர்வு பணிகளை மேற்கொண்டு எந்த ஒரு வாக்காளரும் விடுபடா வண்ணம் வாக்காளர் பட்டியல் தொடர்பான பணிகளை அலுவலர்கள் சிறப்புடன் மேற்கொள்ள வேண்டும் . இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்திய நாராயணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் யோகஜோதி, திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் கண்ணன், கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) கிருஷ்ணன், தனி தாசில்தார் (தேர்தல்) பசுபதி, அங்கீகரிக்கப்பட்டஅரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் ராஜேஸ்வரி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத் தலைவர் பாலசுப்ரமணியன், செயலாளர் பத்மாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கருணை அடிப்படையில் வாரிசுக்கு வேலை வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளி கிராம உதவியாளர்களுக்கு வழங்கப்பட்ட எரிபொருள் படி ரூ.2,500 நிறுத்தியதை கண்டிப்பது, சி.பி.எஸ். திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கும், இறந்தவர்களுக்கு பிடித்தம் செய்த தொகையை வழங்காமல் காலம் தாழ்த்துவதை கண்டிப்பது உட்பட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற டிசம்பர் 7-ந் தேதி தாலுக்கா அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்திலும், 19-ந் தேதி ஒரு நாள் விடுப்பு போராட்டத்திலும், 28-ந் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்திலும் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி:
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகன் சரவணன் (வயது 38) கூலி வேலை செய்து வருகிறார். இவர் சொந்த வேலையின் காரணமாக தனது இருசக்கர வாகனத்தில் சேலத்தில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு சென்று மீண்டும் சேலம் செல்ல சின்ன சேலம் ஆவின் பாலகம் எதிரே உள்ள சென்னை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது இவருக்கு பின்னால் வந்த லாரி மோதியது.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சரவணன் 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து சின்ன சேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சியில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சத்தி யநாராயணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பேசியதாவது:-கள்ளக்குறிச்சி மாவட்ட த்தில் விவசாயிகளின் கோரிக்கைகளை நேரடியாக கேட்டும் மனுவாக பெறுவதற்கும், ஒவ்வொரு மாதத்திலும் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதி களுடான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் ஒவ்வொரு மாதமும் விவசாயிகள் அளிக்கும் கோரிக்கைகள் மீது விரைந்து தீர்வு காணப்பட்டு வருகிறது. இதேபோல்இக்கூட்டத்தில் விவசாயிகள் கரும்பு லாரிகளில் கொண்டு செல்லு ம்போது வழித்தடங்களில்
மின்கம்பங்கள் மோதாமல் இருப்பதற்கு ஏதுவாக மின்கம்பிகளை உயர்த்திடவும், விளை நிலங்களில்பயிர்களை அதிகமாக சேதப்படுத்தும் காட்டுபன்றிகளை சுடு வதற்கு விவசாயிகளுக்கு ஆணையும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கள்களில் பயிர்கடன்களில் விதை உரம் மற்றும் இதரஇடுபொருட்கள் வழங்குவதற்கு பதிலாக பணமாக வழங்கிடவும், கறவை மாடுகள் வளர்ப்ப தற்கு தேசியவங்கிகள் மூலம் கடன் வழங்கிடவும் கோரிக்கை வைத்தனர்.விவசாய நிலங்களில் கழிவு நீர் வெளியேற்றுவதை தடுத்திடவேண்டும் உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் பரிசீலனை செய்து, விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்தார்.கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர் சுந்தரம், தோட்டக்கலை துணை இயக்குநர் சசிகலா, மேலாண்மை இயக்குநர் கள்ளக்குறிச்சி 2 கூட்டுறவு சர்க்கரை ஆலை முருகேசன், நீர்வளத்துறை செயற்பொறியாளர் அருணகிரி, தமிழ்நாடு நுகர்பொருள்வாணிப கழகம் முதுநிலை மண்டல மேலாளர் நந்தகுமார், தமிழ்நாடு மின்சார வாரியம்மேற்பார்வைப் பொறியாளர்(பொறுப்பு) கணேசன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் தியாகராஜன், கண்காணிப்பு பொறி யாளர் தமிழ்நாடு மின்சார வாரியம்(பொறுப்பு)கிருஷ்ணமூர்த்தி, விவசாய சங்க பிரதிநிதிகள், விவ சாயிகள் மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள்கலந்து கொண்டனர்.
- விபத்து குறித்து தகவல் அறிந்து சென்ற திருநாவலூர் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
- விபத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
உளுந்தூர்பேட்டை:
சென்னையில் இருந்து மதுரைக்கு தனியார் ஆம்னி பஸ் ஒன்று நேற்று இரவு புறப்பட்டது. இந்த பஸ் இன்று அதிகாலை 5.30 மணியளவில் உளுந்தூர்பேட்டை தாலுகா பரிக்கல் கிராமம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றது.
அப்போது எதிர்பாராதவிதமாக பஸ்சின் முன்பக்க டயர் வெடித்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சில் பயணம் செய்த 40 பேரில் 10 பேர் படுகாயமடைந்தனர். மற்றவர்களுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் இல்லை.
விபத்து குறித்து தகவல் அறிந்து சென்ற திருநாவலூர் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
மேலும், கிரேன் வரவழைக்கப்பட்டு கவிழ்ந்து கிடந்த பஸ்சினை சாலையோரமாக தூக்கி வைத்து போக்குவரத்தை சரிசெய்தனர். இந்த விபத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை கூட்ரோடு அருகே இளையனார்குப்பம் உள்ளது. இங்கு செல்லக்கோட்டி (வயது 45) என்பவர் மெடிக்கல் வைத்து நடத்தி வருகிறார். அங்குள்ள நோயாளிகளுக்கு, டாக்டரின் பரிந்துரை இல்லாமல் மருத்து கொடுப்பது, ஊசி போடுவது என அனைத்து சிகிச்சைகளையும் அளித்து வந்துள்ளார்.
மேலும், ஒரு சில நோயாளிகளுக்கு அவரே மாத்திரை தயாரித்தும் வழங்கி வந்துள்ளார். இது குறித்து சங்கராபுரம் தாசில்தார் குமரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சுகாதாரத் துறை அலுவலர்கள் மற்றும் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு தாசில்தார் குமரன் விரைந்து சென்றார்.அங்கிருந்த மெடிக்கலுக்கு சுகாதாரத் துறையினர் சீல் வைத்தனர். மேலும், மாத்திரை, மருந்து தயாரித்த மெடிக்கல் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நைனார்பாளையம் பேக்காடு பகுதியில் வசித்து வருபவர் தமிழ்செல்வி .இவரது வீட்டில் கடந்த 19.9.23 அன்று யாரும் இல்லாத நேரத்தில் 19 பவுன் நகை திருட்டு போனது. இது குறித்து கீழ்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் நேற்று செம்பாக்குறிச்சி பஸ் நிறுத்தத்தில் சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராமன் மற்றும் கீழ்குப்பம்சப்- இன்ஸ்பெக்டர் சந்திரன் தனிப்பிரிவு போலீஸ் சரவணன் ஆகியோர் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்பொழுது சந்தேகம் படும்படியாக இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை பிடித்து விசாரித்ததில் முன்னுக்கும் பின் முரணாகப் பதிலளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்ட போது அவர் சின்னசேலம் அருகே உள்ள தென் சிறுவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி மகன் சந்திரமோகன் (வயது 26 )என்பதும் இவர் நைனார்பாளையம் பேக்காடு பகுதியை சேர்ந்த தமிழ்செல்வி வீட்டில் நகை திருடியதும் தெரியவந்தது.பின்னர் இவரிடமிருந்து 9 பவுன் நகை மீட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சந்திரமோகனை கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே உள்ள புதுமாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சோலையப்பன் (வயது 38). இவரது மனைவி விஜயசாந்தி (32). இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். சோலையப்பன் செங்கல் வியாபாரம் செய்து வந்தார்....இதில் இவருக்கும் கடன் பிரச்சினை உள்ளதாகவும், இதனால் இவர் தினமும் குடிப்பதாகவும், இதனை விஜயசாந்தி கண்டிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், செங்கல் சூளையில் உள்ள ஒரு இளம்பெண்ணுடன் தொடர்பு உள்ளதாகவும் தெரிகிறது.இவர் கடந்த 2 ஆண்டுகளாக உளுந்தூர்பேட்டை எடைக்கல் காப்புக்காட்டில் செங்கல் சூளை வைத்து நடத்தி வந்தார். ஒரு சில நாட்கள் அங்கேயே தங்கி சூளை பணிகளை மேற்கொண்டு வந்தார் எனத் தெரிகிறது.
இந்நிலையில் நேற்று காலை சூளையின் அருகே சோலைப்பன் இறந்து கிடப்பதாக உளுந்தூர்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். சோலையப்பன் நெற்றியில் வெட்டு காயம் இருந்தது, மேலும், அருகில் இருந்த மோட்டார் கொட்டகையின் தளத்தில் கைலி தொங்கி கொண்டிருந்தது.இதையடுத்து உளுந்தூ ர்பேட்டை போலீசார் அங்கிருந்த சூளை தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் நேற்று முன்தினம் இரவு சோலையப்பன் மற்றும் அவரது நண்பர்களான செந்தில், குமார் ஆகியோர் சூளையில் அமர்ந்து மது குடித்தது தெரியவந்தது.பின்னர் காலையில் பார்க்கும் போது சோலையப்பன் இறந்து கீழே கிடந்தாகவும், அவருக்கு அருகில் செந்தில், குமார் ஆகியோர் இருந்தாகவும் சூளையில் தங்கி பணி செய்யும் ஊழியர்கள் போலீசாரிடம் கூறினார்கள்.தொடர்ந்து கொள ஞ்சியப்பனின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்கு பதிவு செய்து செந்தில், குமார் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சோலையப்பன் மனைவி விஜயசாந்தி, தனது கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், தொழில் போட்டி அல்லது தகாத உறவில் தொடர்புடையவர்கள் அவரை கொலை செய்திருக்கலாம் என கூறினார்.பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்த பிறகே, கொலையா? அல்லது தற்கொலையா? என்பது தெரியவரும் என்று போலீசார் கூறி, விஜயசாந்தியிடம் புகார் பெற மறுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை, தியாகதுருகம் பகுதியில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
கள்ளக்குறிச்சி:
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையின்படிமருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில், பல்வேறு குடும்ப நல அறுவை சிகிச்சைகள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், கள்ளக்குறிச்சி மாவட்ட த்தில் அதிக அளவு குடும்ப நல அறுவை சிகிச்சை கள் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துமனை களில்மேற்கொ ண்டத ற்காக இப்பணியினை பாராட்டி மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வு துறை அமைச்சர் கள்ளக்குறிச்சி மாவட்ட துணை இயக்குநர்( சுகாதாரப் பணிகள்) ராஜா வுக்கும், அதிக அளவில் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்த எலவனா சூர்கோட்டை வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் மாநிலஅளவில் முன்றாம் இடம் பெற்றதற்காக டாக்டர் தேன்மொழிக்கும் கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்க ப்பட்டது. இதையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், கள்ளக்குறிச்சி மாவட்டம் மாநில அளவில் குடும்ப நல அறுவை சிகிச்சை அதிக அளவில் மேற்கொண்டமைக்காக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் ,கள்ளக்குறிச்சி துணைஇயக்குநர் (சுகா தாரப் பணிகள்) ராஜா மற்றும் எலவனா சூர்கோ ட்டைவட்டார மருத்துவர் தேன்மொழி அகியோருக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இதனை மாவட்டகலெக்டர் ஷ்ரவன் குமாரிடம் காண்பித்து வாழ்த்துபெற்றனர். இந்நிகழ்வில், இணை இயக்குநர் ( சுகாதார பணிகள்) டாக்டர் ராமு மற்றும் அரசுஅலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி:
விழுப்புரம் மாவட்டம் ஆமூர் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மனுவில் கூறியுள்ளதாவது:-
விழுப்புரம் மாவட்டம் ஆமூர் கிராமத்தை ச் சேர்ந்த சுமார் 150- க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே வேலூர் கிராம எல்லையில் சுமார் 500 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் நாங்கள் நெல், கரும்பு, உளுந்து உள்ளிட்ட பயிர்களை பயிர் செய்து வருகிறோம். இந்நிலையில் எங்களது விவசாய நிலங்களுக்கு செல்லும் பொது பாதையை ஒரு சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் விவசாய நிலங்களுக்குச் செல்ல முடியாமல் ஏரியில் ஒத்தையடி பாதையில் வந்து செல்லும் அவல நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். மேலும் பொதுப் பாதையை அகற்றவில்லை என்றால் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் இருக்கப் போவதாகவும் மனுவில் கூறியுள்ளனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த ராஜபாண்டலத்தை சேர்ந்தவர் மாரி(67) விவசாயி. இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் பழனி கோவிலுக்கு சென்று விட்டார். இந்நிலையில் மீண்டும் மாரி வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீடு திறந்து நிலையில் கிடந்துள்ளது.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்து அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து சுமார் 4 லட்சம் மதிப்புள்ள 9 பவுன் நகை, வெள்ளி கொலுசு, வெள்ளி பாத்திரம், பத்தாயிரம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து மாரி கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை தலைமை தேர்தல் அலுவலரின் அறிவுரைகளி ன்படி கள்ளக்குறிச்சி மாவ ட்டத்தில் 27.10.2023 முதல் 9.12.2023 வரை சிறப்பு சுருக்க திருத்தம்-2024 பணியின்கீழ் 1.1.2024 தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களை வாக்காளர்பட்டியலில் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இச்சிறப்பு சுருக்க திருத்தப்பணியின்கீழ் 4.11.2023 மற்றும் 5.11.2023 ஆகிய நாட்களில் நடைபெற்ற முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும்திருத்தம் தொடர்பாக 23,011 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும், 25.11.2023 மற்றும் 26.11.2023 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்நிலையில்சிறப்பு சுருக்கத் திருத்தப் பணி முன்னேற்றம் குறித்து தமிழக தலைமை தேர்தல்அதிகாரியும் , அரசு முதன்மைச் செயலா ளருமான சத்யபிரதா சாகு, மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான ஷ்ரவன் குமாருடன் கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை பயணியர் மாளிகையில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது புதிய வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பாக பொதும க்களிடமும், கல்லூரி மாணவர்களிடமும் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இம் முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களை உரிய காலக்கெடுக்குள் நடவடிக்கை மேற்கொள்ள வும் அறிவுரை வழங்கினார்.மேலும், ஒரே நபரின் புகைப்படம் மற்றும் ஒரே நபரின் பெயர் மற்றும் முகவரி ஒரே வாக்குச்சாவடி மையத்திற்குள்ளேயும், ஒரே சட்டமன்ற தொகுதி க்குட்பட்ட வாக்குச்சாவடி மையத்திற்குள்ளேயும், இதர சட்டமன்ற தொகுதி க்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்க ளுக்கான வா க்காளர் பட்டியலி ல்கண்டறியப்பட்ட பதிவுகளை சம்மந்தப்பட்ட வாக்காளருக்கு உரிய அறிவிப்பினை வழங்கி, தகுதியற்ற வாக்காளர்களை நீக்கம் செய்ய அறிவுறுத்தினார்.
நாடாளுமன்ற பொதுத் தேர்தல் பணி முன்னே ற்பாடுகள் குறித்தும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வாக்குப்பதிவை சரிபாக்கும் கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது குறித்தும், பதட்டமான வாக்கு ச்சாவடிகள் குறித்தும் கலெக்டரிடம் கேட்டறிந்தார்.மேலும் நாடாளுமன்றத் பொதுத் தேர்தலைஅமைதியான முறையில் நடத்திட போதிய முன்னேற்பாடு பணிகளை விரைந்து மேற்கொள்ள தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவுறுத்தினார்.அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் சத்திய நாராயணன்,கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர்லால், கள்ளக்குறிச்சிவருவாய் கோ ட்டாட்சியர் (பொறுப்பு) கிருஷ்ணன், தரணி கூட்டுறவு சர்க்கரை ஆலை வடிப்பக அலுவலர் பாலமுருகன், தனி தாசி ல்தார் (தேர்தல்) பசுபதி ஆகியோர் உடனிருந்தனர்.