என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மர்மமான முறையில் இறந்து கிடந்த சூளை வியாபாரி - தொழில் போட்டியில் கொலை செய்யப்பட்டதாக மனைவி புகார்
கள்ளக்குறிச்சி:
தியாகதுருகம் அருகே உள்ள புதுமாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சோலையப்பன் (வயது 38). இவரது மனைவி விஜயசாந்தி (32). இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். சோலையப்பன் செங்கல் வியாபாரம் செய்து வந்தார்....இதில் இவருக்கும் கடன் பிரச்சினை உள்ளதாகவும், இதனால் இவர் தினமும் குடிப்பதாகவும், இதனை விஜயசாந்தி கண்டிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், செங்கல் சூளையில் உள்ள ஒரு இளம்பெண்ணுடன் தொடர்பு உள்ளதாகவும் தெரிகிறது.இவர் கடந்த 2 ஆண்டுகளாக உளுந்தூர்பேட்டை எடைக்கல் காப்புக்காட்டில் செங்கல் சூளை வைத்து நடத்தி வந்தார். ஒரு சில நாட்கள் அங்கேயே தங்கி சூளை பணிகளை மேற்கொண்டு வந்தார் எனத் தெரிகிறது.
இந்நிலையில் நேற்று காலை சூளையின் அருகே சோலைப்பன் இறந்து கிடப்பதாக உளுந்தூர்பேட்டை போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். சோலையப்பன் நெற்றியில் வெட்டு காயம் இருந்தது, மேலும், அருகில் இருந்த மோட்டார் கொட்டகையின் தளத்தில் கைலி தொங்கி கொண்டிருந்தது.இதையடுத்து உளுந்தூ ர்பேட்டை போலீசார் அங்கிருந்த சூளை தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் நேற்று முன்தினம் இரவு சோலையப்பன் மற்றும் அவரது நண்பர்களான செந்தில், குமார் ஆகியோர் சூளையில் அமர்ந்து மது குடித்தது தெரியவந்தது.பின்னர் காலையில் பார்க்கும் போது சோலையப்பன் இறந்து கீழே கிடந்தாகவும், அவருக்கு அருகில் செந்தில், குமார் ஆகியோர் இருந்தாகவும் சூளையில் தங்கி பணி செய்யும் ஊழியர்கள் போலீசாரிடம் கூறினார்கள்.தொடர்ந்து கொள ஞ்சியப்பனின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்கு பதிவு செய்து செந்தில், குமார் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சோலையப்பன் மனைவி விஜயசாந்தி, தனது கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், தொழில் போட்டி அல்லது தகாத உறவில் தொடர்புடையவர்கள் அவரை கொலை செய்திருக்கலாம் என கூறினார்.பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்த பிறகே, கொலையா? அல்லது தற்கொலையா? என்பது தெரியவரும் என்று போலீசார் கூறி, விஜயசாந்தியிடம் புகார் பெற மறுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை, தியாகதுருகம் பகுதியில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்