search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளக்குறிச்சியில் ஆய்வு நாடாளுமன்ற தேர்தலை அமைதியாக நடத்த முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும் - கலெக்டருக்கு தலைமை தேர்தல் அதிகாரி அறிவுரை
    X

    தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷ்ரவன் குமாருடன் ஆய்வு மேற் கொண்ட காட்சி. 

    கள்ளக்குறிச்சியில் ஆய்வு நாடாளுமன்ற தேர்தலை அமைதியாக நடத்த முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும் - கலெக்டருக்கு தலைமை தேர்தல் அதிகாரி அறிவுரை

    முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களை உரிய காலக்கெடுக்குள் நடவடிக்கை மேற்கொள்ள வும் அறிவுரை வழங்கினார்.

    கள்ளக்குறிச்சி:

    இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை தலைமை தேர்தல் அலுவலரின் அறிவுரைகளி ன்படி கள்ளக்குறிச்சி மாவ ட்டத்தில் 27.10.2023 முதல் 9.12.2023 வரை சிறப்பு சுருக்க திருத்தம்-2024 பணியின்கீழ் 1.1.2024 தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களை வாக்காளர்பட்டியலில் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இச்சிறப்பு சுருக்க திருத்தப்பணியின்கீழ் 4.11.2023 மற்றும் 5.11.2023 ஆகிய நாட்களில் நடைபெற்ற முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும்திருத்தம் தொடர்பாக 23,011 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும், 25.11.2023 மற்றும் 26.11.2023 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்நிலையில்சிறப்பு சுருக்கத் திருத்தப் பணி முன்னேற்றம் குறித்து தமிழக தலைமை தேர்தல்அதிகாரியும் , அரசு முதன்மைச் செயலா ளருமான சத்யபிரதா சாகு, மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான ஷ்ரவன் குமாருடன் கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை பயணியர் மாளிகையில் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது புதிய வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பாக பொதும க்களிடமும், கல்லூரி மாணவர்களிடமும் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இம் முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களை உரிய காலக்கெடுக்குள் நடவடிக்கை மேற்கொள்ள வும் அறிவுரை வழங்கினார்.மேலும், ஒரே நபரின் புகைப்படம் மற்றும் ஒரே நபரின் பெயர் மற்றும் முகவரி ஒரே வாக்குச்சாவடி மையத்திற்குள்ளேயும், ஒரே சட்டமன்ற தொகுதி க்குட்பட்ட வாக்குச்சாவடி மையத்திற்குள்ளேயும், இதர சட்டமன்ற தொகுதி க்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்க ளுக்கான வா க்காளர் பட்டியலி ல்கண்டறியப்பட்ட பதிவுகளை சம்மந்தப்பட்ட வாக்காளருக்கு உரிய அறிவிப்பினை வழங்கி, தகுதியற்ற வாக்காளர்களை நீக்கம் செய்ய அறிவுறுத்தினார்.

    நாடாளுமன்ற பொதுத் தேர்தல் பணி முன்னே ற்பாடுகள் குறித்தும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வாக்குப்பதிவை சரிபாக்கும் கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது குறித்தும், பதட்டமான வாக்கு ச்சாவடிகள் குறித்தும் கலெக்டரிடம் கேட்டறிந்தார்.மேலும் நாடாளுமன்றத் பொதுத் தேர்தலைஅமைதியான முறையில் நடத்திட போதிய முன்னேற்பாடு பணிகளை விரைந்து மேற்கொள்ள தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவுறுத்தினார்.அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் சத்திய நாராயணன்,கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர்லால், கள்ளக்குறிச்சிவருவாய் கோ ட்டாட்சியர் (பொறுப்பு) கிருஷ்ணன், தரணி கூட்டுறவு சர்க்கரை ஆலை வடிப்பக அலுவலர் பாலமுருகன், தனி தாசி ல்தார் (தேர்தல்) பசுபதி ஆகியோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×